24 special

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... லாட்டரியில் அடிச்சது 25கோடி பரிசு !

lottery
lottery

தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு கேரளா மாநிலம் திருவோணம் பண்டிகையின் போது வாங்கிய லாட்டரி சீட்டில் ரூ.25 கோடி கிடைத்துள்ளது. அந்த பணத்தை கொடுக்க வேண்டாம் என்று தமிழகத்தை சேர்ந்த அம்புரோஸ் என்பவர் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார் .  கேரளா மாநிலம் என்றாலே நினைவுக்கு வருவது லாட்டரி சீட்டு அங்கு செல்வோர் நிச்சயம் அதனை வாங்கி பரிசு தொகை கிடைத்திருக்கிறதா என பயன்படுத்தி பார்ப்பதுண்டு. மேலும் கேரளா அரசுக்கு முக்கிய வருவாயாக இருப்பது லாட்டரி சீட் விற்பனை மூலம் வரக்கூடிய பணம் பெரும் பங்காகவுள்ளது. தமிழ்நாட்டில் அந்த லாட்டரி சீட் தடை செய்யப்பட்டாலும் கள்ளச்சந்தையில் கிடைக்க செய்கிறது.  கேரளா அரசு அதனை நேரடியாக விற்கிறது அந்த மாநிலத்தில், ஓணம் பண்டிகையொட்டி கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜன் உட்பட 4 பேர் வாங்கிய லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது.


அவர்கள் அதனை வாங்க திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்திற்கு டிகட்டுடன் சென்றிந்தனர். கேரளா அரசு லாட்டரியில் பரிசு விழுந்தவர்களது முழு விபரம் மற்றும் எப்படி லாட்டரி சீட் கிடைத்தது, கேரளா அவர்கள் எப்போது வந்து லாட்டரி வாங்கினார் போன்ற முழு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி உரிய ஆவணம் சரியாக இருந்தால் மட்டுமே பரிசு தொகை வழங்கப்படும்.அந்த வகையில் வெளி மாநிலத்தை சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கு லாட்டரி சீட்டு எப்படி கிடைத்தது? எங்கே வாங்கினார்கள்? எப்போது கேரளா வந்தார்கள்? என்பது உள்ளிட்ட தகவல்களை சமர்பிக்குமாறு அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். கேரளாவை சேர்ந்த உறவினரை பார்க்க வந்தபோது லாட்டரி சீட்டு வாங்கியதாக பாண்டியராஜன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அப்படி வந்து சென்றது மற்றும் லாட்டரி வாங்கியதற்கான அத்தாட்சி எதுவும் அவர்களிடம் இல்லை.இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அம்புரோஸ் என்பவர் பாண்டியராஜன் உள்ளிட்ட நால்வர் மீது கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிருக்கிறார்.

அதில், பாண்டியராஜன் ஆகியோர் லாட்டரி சீட்டை தமிழநாட்டில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பவர்கள் அவர்களுக்கு 25 கோடி ரூபாய் பணத்தை வழங்க கூடாது. அந்த பணத்தை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, பரிசுக்குரியவர்கள் கையில் எப்படி லாட்டரி வந்தது என முழுவதுமாக விசாரித்த பின்னரே பரிசு தொகை வழங்குவதற்கான ஆலோசனை எடுக்கப்படும் என்று கேரளா மாநில லாட்டரி துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.  இந்த ஆண்டு ஒணம் பண்டிகையை ஓட்டி 71 லட்சம், லாட்டரி சீட்டுகள் விருத்திருந்தன. அதன் முதல் தொகையான 25 கோடியை யார் வெல்லப்போவது என்று கேரளா மாநிலம் முழுவதும் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் இப்படி தமிழ்நாட்டை சேர்ந்த இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் கமெண்டை பதிவிட்டு வருகின்றனர்.