24 special

தமிழர்களே நீங்கள் சிரித்து கொண்டே இருங்கள் அங்கே பாருங்கள் என்ன நடக்கிறது...! உள்ளதும் போச்சா..!

ups exam
ups exam

தமிழகத்தில் வட இந்தியர்களை கிண்டல் செய்யும் போக்கு சில அரசியல் கட்சிகள் மூலம் சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் வளர்ந்து இருக்கிறது சமீபத்தில் கூட திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாங்கள் தமிழர்கள் உயர்வான இடத்தில் இருக்கிறோம் இந்தி பேசும் உன் ஆட்கள் எங்கள் ஊரில் கட்டிடம் கட்டி கொண்டு இருக்கிறான் என ஏளனமாக பேசினார்.


இது ஒருபுறம் இருக்க இந்தியாவை ஆட்சி செய்யும் இரு முக்கிய பணிகளான IAS மற்றும் IPS பணிகளில் வட இந்திய மாணவர்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது, இது குறித்து பெரியசாமி தங்கவேல் என்பவர் குறிப்பிட்ட தகவலை பார்க்கலாம்.

பீகார் பாட்னாவில் நதிக்கரையில் அமர்ந்து மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் அற்புதமான காட்சி, மொழியை வைத்தும் பீடாவை வைத்தும்  சில அதிமேதாவிகள்???!!! கேவலமாக பேசும் பீகாரில் இருந்து தான் அதிகமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாகிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்.


அதேசமயம் தமிழ்நாட்டிலிருந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுக்கு தேர்வாகும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.( 2017 ஆம் ஆண்டு 119 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்றார்கள். 2020 ஆம் ஆண்டு அது வெறும் 30 ஆக குறைந்துள்ளது), சினிமா மோகமும் அதை ஒட்டி அதிகரித்துள்ள டாஸ்மாக் மோகமும் தலை விரித்தாடுகிறது நம் தமிழ்நாட்டில்.

நாம் ஏதோ பெரிதாக சாதித்து விட்டோம் நம்மை விட மற்றவர்கள் கீழ்தான் என்ற எண்ணம் மூளையில் விதைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்று., ஒரு கோடு சிறிதாக அதை அழிக்க வேண்டியதில்லை. அதன் பக்கத்தில் பெரிய கோடுகள் வரைந்தால் அந்த கோடு சிறிதாகிவிடும்.

அவ்வாறு கோடு வரையும் பணியினை பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆரம்பித்து செய்துகொண்டிருக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டாக 2017 ஆண்டு வெறும் 17 மருத்துவக்கல்லூரிகள் இருந்த உத்தரப் பிரதேசத்தில் இன்று 67 மருத்துவக் கல்லூரிகள் வெறும் ஐந்து வருடங்களில் வந்துள்ளன.


உழைப்பு மட்டுமே உயர்த்தும். உழைப்பவர்கள் மட்டுமே உலகத்தை ஆள முடியும். பழம் பெருமைகளை வைத்து உலகத்தை ஆட்சி செய்ய முடியாது. கல்வியாளர்கள் வெறும் அரசியல் மட்டுமே பேசிக்கொண்டு  இல்லாமல் உண்மையாக இதுபோன்ற நிலையை உணர்ந்து அரசிற்கும் உணர்த்தி மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டி அவர்களை கட்டளையிடும் பதவிக்கு தயார் படுத்த வேண்டும். மீண்டும் தமிழ் நாட்டு மாணவர்கள் அதிக அளவில் போட்டித்தேர்வுகளில் தேர்வாக வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் ஆசை என குறிப்பிட்டுள்ளார்.

சொந்த மாநிலமான தமிழகத்தில் வேலை இல்லாமல் எத்தனை தமிழர்கள் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள் அதே நிலை தான் வட மாநிலங்களில் அப்படி இருக்கையில் ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்யாமல் தமிழர்கள் விரைவில் இந்திய அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் மாறாக அரசியல் கட்சிகளின் மொழி அரசியலில் விழுந்தால் பாதிப்பு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

இன்றும் கேலி செய்து சிரித்து கொண்டு இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய ஆட்சி பணியில் ஒரு தமிழகத்தை சேர்ந்த தமிழர் இடம்பெறுவதே மிகுந்த கேள்வி குறியாக மாறிவிடும்.