Cinema

டெல்லி பைல்ஸ் படத்தில் தமிழ்நாட்டை பற்றிய காட்சிகளும் வருகிறது... இயக்குனர் அதிரடி தகவல்..!

Delhi files
Delhi files

பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ்  நிறுவனம் தயாரித்த படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். பல்வேறு விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்ற இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.


இந்த படத்தைத் தொடர்ந்து,  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் டெல்லி ஃபைல்ஸ்என அவர் தெரிவித்தார். பேட்டியளித்துள்ள விவேக் , ''நான் அடுத்தாக இயக்க போகும் டெல்லி ஃபைல்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டின் பல உண்மைகளை சொல்லும். இந்த படம் டெல்லியைப் பற்றியது மட்டுமல்ல. முகலாயர்கள் ஆட்சி தொடங்கி பிரிட்டிங் ஆட்சி வரை டெல்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது குறித்து படத்தின் கதைக்களம் அமையும்.

பெரிய அளவிலான இந்துகளின் நாகரீகம்  வரலாற்றில் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. மேலும் நாம் பலவீனமானவர்கள் என்று சிலரால் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். மேற்கத்திய ஆட்சியாளர்களிடமிருந்தும் அல்லது படையெடுப்பாளர்களிடமிருந்து தான் நாம் அனைத்தையும் கற்றுக்கொண்டோம். அவை முற்றிலும் தவறானவை.

வரலாறு ஆதாரம் மற்றும் உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும். கதை அடிப்படையில் இருக்கக்கூடாது. இந்தியாவில், பிரச்சினை என்னவென்றால், நிறைய பேர் வரலாற்றை கதை அல்லது அவர்களின் அரசியல் மற்றும் இந்தியாவின் அரசியல் அடிப்படையில் எழுதுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

விவேக் அக்னீகோத்ரி இயக்கும் டெல்லி பைல்ஸ் படத்தில் தமிழர்கள் இலங்கையில் சந்தித்த இன அழிப்பு, சீக்கியர்கள் பஞ்சாப்பில் சந்தித்த வரலாற்று நிகழ்வுகள் ஆகியவை ஆவண படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.