
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சமூக ஆர்வலர்களை விட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை போராளிகளாக திகழ்ந்து வந்தனர். ஏனென்றால் அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது நீட்டா ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நீட்டை முற்றிலுமாக தமிழகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் அது ஒன்றே முடிவு என்ற வகையிலான கோஷங்கள் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டது அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரை உலகினார் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் அது நடிகர் சூர்யாவும் அவரது குடும்பமும் நீட் எதிர்ப்பு குறித்த கருத்தில் வலுவாக நின்றதோடு மத்திய அரசிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்திருந்தார். இதனை அடுத்து சமூக பிரச்சனைகள் சார்ந்த படங்களில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தமிழகத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெற அதற்கு பிறகு தமிழ் திரை உலகின் போராளிகள் அனைவரும் மௌனமாக இருக்க ஆரம்பித்தனர்.
மேலும் நடிகர் சூர்யா திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தொடர்ந்து அமைதியாக இருந்து வர திடீரென்று தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து மும்பையில் குடியேறினார். இது குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது மேலும் எதற்காக திடீரென்று மும்பையில் குடியேறியர்கள் என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக அங்கு குடியேறி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சூர்யா மும்பைக்கு குடியேறியதற்கு இதுதான் காரணம் என்ற வகையில் அரசியல் விமர்சகர் தனியார் youtube சேனல் ஒன்றில் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது, குழந்தைகளின் படிப்பிற்காக அங்கு சென்றதாக சூர்யா கூறியுள்ளார் ஆனால் சென்னையில் இல்லாத கல்வித்தரமா அங்கு இருக்க போகிறது! இவர் தானே கூறினார் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்று, ஆனால் தற்போது சூர்யா தன் குழந்தைகளை சேர்த்திருக்கும் இடத்தில் தமிழே இல்லையே ஹிந்தி மட்டும் தான் ஹிந்தி தெரியாது போடா என்று கூறியவர்களின் சூர்யாவும் ஜோதிகாவும் முக்கியமானவர்கள்! அப்படி இருக்கும் பொழுது இவர்கள் எதற்கு அங்கு சென்றார்கள், படிப்பதற்கு என்றால் இங்குள்ள தரமான கல்வியில் சேர்க்கலாமே!
முதல்வர் மு க ஸ்டாலின் மகளான செந்தாமரை நடத்தும் கல்வி நிறுவனத்தை விடவா அங்கு தரமான கல்வி கிடைக்கப்போகிறது! அல்லது இங்க இருக்கக்கூடிய சர்ச் பார்க் கான்வென்ட்டை விட அங்கு தரமாக கல்வி உள்ளதா? அங்கு எதற்கு குடியேறினார்கள்! சர்வதேச நிழல் உலக தாதாக்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்பது என்னுடைய கருத்து, வெளிநாட்டில் இருந்து நிதி எல்லாம் வருவதையும் சட்டத்திற்கு புறம்பாக வரும் பணம் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது பிரதமர் மோடி அரசு, அப்படி மோடி அரசு செய்தவுடன் இவர்கள் மொத்தமாக மோடி அரசுக்கு எதிராக மாறினார்கள்! ஆனால் இப்பொழுது பாருங்கள் பேச்சே இல்லை! நீட் வந்த பிறகு ஒரு மருத்துவரை கூட உருவாக்க முடியவில்லை என்று கூறினார்கள். அதுக்கு முன்னாடி எப்படி உருவாக்கினார்கள் மாணவர் மாணவிகள் தங்கள் உழைப்பால் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை எடுத்து எம்பிபிஎஸ் சீட்டை அவர்களே பெறுகிறார்கள் அதற்கு பிறகு கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் செலவிட்டு இவர்கள் பெயரை சம்பாதித்துக் கொள்வது! அதனால் அகரம் பவுண்டேஷனை சோதனை இட்டால் எல்லா உண்மையும் வெளிவரும் என்று ஆதங்கமாக கூறியுள்ளார். இப்படி நடிகர் சூர்யா குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக்கி வருவதால் மக்கள் அனைவரும் மத்தியில் அகரம் பவுண்டேஷன் குறித்த கேள்வியும் ஆமாம் உண்மையிலேயே சூர்யா ஏன் தற்போது அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது