24 special

பிரதமரை சந்தித்த துரைமுருகன்!

duraimurugan, pmmodi
duraimurugan, pmmodi

2026 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை  ஒவ்வொரு கட்சியும் மேற்கொண்டு வருகிறது. இதன்படி தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணியில் 195 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக பாஜக அறிவித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட பட்டியல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைகளில் சர்ச்சைக்குரிய வகையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அடுத்து வெளியாகும் பாஜக தரப்பின் வேட்பாளர்கள் பட்டியலில் அதிக பெண் வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படி தேர்தலுக்காக அனைத்து வேலைகளையும் ஒவ்வொரு நாளும் மற்ற கட்சிகளை விட வேகமாகவும் பாஜக ஒரு பக்கம் எடுத்து வர மறுபக்கம் அதன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சமூகத்தில் அவர்களுக்கு எதிராக நிலவும் அதிருப்திகளையும் மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் சமாளிப்பதற்கே நேரம் பத்தாமல் திண்டாடி வருகின்றனர்.


அதுமட்டுமின்றி கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தின் நிலை வந்த சூழ்நிலைகள் அனைத்துமே திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துவது போன்று அமைந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் தற்போது போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் கும்பலுக்கும் தமிழ் திரை உலகின் திரைப்பட தயாரிப்பாளரும் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கிற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.அதாவது 2013 ஆம் ஆண்டில் ஒரு வருட காலத்திற்கு போலீஸ் அதிகாரிகளால் தேடப்பட்ட ஒரு குற்றவாளி 2021ல் வெளிச்சத்திற்கு வருவதோடு பெரும் அதிகாரத்தையும் தன் கைகள் வைத்து திரைப்படங்களையும் தயாரிக்க ஆரம்பிக்கிறார்! இதற்கு முக்கிய காரணம் திமுக அவருக்கு மேற்கு தொகுதி அயலக பிரிவையும் வழங்கி அதிகாரத்தை கொடுத்தது, இவரோடு பல சினிமா பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கூட்டு சேர்ந்துள்ளனர் என்ற தகவலையும் தற்போது டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் முன்பை விட தற்போது போதைப் பொருள் கடத்தலின் புலக்கமும் பயன்பாடும் அதிகரித்துள்ளதாகவும் மக்களே குற்றம் சாடி வருகின்றனர், இதனால் திமுகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றனர். மேலும் இதே நிலை நீடித்தால் நிச்சயமாக நாம் இதுவரை செய்து வந்த ஊழல் விவகாரங்களும் வெளியாகிவிடும் ஏற்கனவே நம் உடனே இருந்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவரும் ஊழல் வழக்குகளிலே சிக்கி தற்போது தங்களது பதவியை இழந்த உள்ளனர் இன்னும் சில அமைச்சர்களின் வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது அதனால் எந்த நேரத்திலும் நம்மிடத்திலும் அமலாக்க துறையோ அல்லது வருமானவரித்துரையோ சோதனை மேற்கொள்ள வரலாம் என்று பல திமுக மூத்த நிர்வாகிகள் அச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27 மற்றும் 28ஆம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்த பொழுது மதுரையில் ஒரு தனியாக ஹோட்டலில் தங்கி இருந்தார் அப்பொழுது அவரை திமுகவின் முக்கிய அமைச்சரான துரைமுருகன் சந்தித்து பேசியதாகவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் அவர் பிரதமரை சந்தித்து பேசியதாகவும் தனக்கு தெரிந்த பல தகவல்களையும் விவரங்களையும் பிரதமரிடம் அவர் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது எப்படி தமிழகத்தின் முதல் குடும்பம் போதை மாஃபியாவை பயன்படுத்தி பெரிய நெட்வொர்க்கை வளர்த்து வந்தது என்ற செய்திகளை குறித்தும் கூறியுள்ளதாகவும் இதனால் தேர்தல் முடிந்ததும் பெரிய சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் விவரங்கள் தெரிவிக்கின்றன.