24 special

அப்படித்தான் வாங்குவோம்! வல்லரசை பொளந்த மோடி! உற்றுப்பார்த்த உலக நாடுகள்! இந்தியா மீண்டும் பவரை நிரூபித்தது

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

உலக  அரசியலில் அடிக்கடி சர்ச்சை கிளப்பும் டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஒரு முறை தன்னுடைய குழப்பமான பேச்சால் உலக தலைவர்களை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளார். ஆனால் இந்த முறை அவர் சொன்ன வார்த்தைகள் இந்தியாவைப் பற்றியவை என்பதால், உலகம் முழுவதும் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது.ஏனென்றால் அமெரிக்காவை சற்று கூட மதிக்காமல் இந்தியா நடந்து வருகிறது. 


 ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிபர் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த மனிதர் என்றும், நிரூபிக்கப்பட்ட தலைவர் என்றும் புகழ்ந்தார். மேலும், , '' ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என உறுதி அளித்தார். இந்த நடவடிக்கை, உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபடும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் '' எனத் தெரிவித்து இருந்தார். இது பரபரப்பை கிளப்பியிருந்தது.

"நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு. ஒவ்வொரு வருடமும் அங்கே ஒரு புதிய தலைவர் இருப்பார். சிலர் ஒரு சில மாதங்கள் பதவியில் இருப்பார்கள். ஆனால், இப்போது எனது நண்பர் (மோடி) நீண்ட காலமாக அங்கே இருக்கிறார்," என்று கூறினார்

ஆனால், "ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய தலைவர்" என டிரம்ப் கூறியது பாகிஸ்தானுக்குச் சரியாகப் பொருந்துகிறது. 1947-ல் உருவாக்கப்பட்டதில் இருந்து, பாகிஸ்தானில் இதுவரை 29 பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர். அவர்களில் ஒருவர்கூட முழு ஐந்தாண்டு காலத்தையும் பூர்த்தி செய்தது இல்லை.

79 வயதாகும் டொனால்ட் டிரம்ப், கடந்த சில மாதங்களாகவே நாடுகளையும், உலகத் தலைவர்களையும் குழப்பிக்கொள்கிறார். டிரம்ப் பேச்சுகளில் காணப்படும் இதுபோன்ற குழப்பமான கருத்துகளால் அவரது நினைவாற்றல் குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில் ரஸ்யாவிடம்  இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து  இந்திய அரசு எதுவும் தெரிவிக்காமல் அமெரிக்க அதிபர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.ட்ரம்ப்பின் கூற்றுக்கும், எழும் விமர்சனங்களுக்கும் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்துள்ளார்.அவர், "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியமான இறக்குமதியாளர்.நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன.

நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள். சந்தை நிலைமையைப் பொறுத்து, எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது.இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: என்னிடம் உள்ள தகவலின்படி, நேற்று அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை.. இவ்வாறு அவர் கூறினார்.