24 special

அண்ணாமலை சொல்லிய அந்த வார்த்தை..? முஸ்லிம் லீக் கதறல்..!

annamalai
annamalai

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி தற்போது புது விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த  பள்ளப்பட்டி பகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காதர் மைதீன்  இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்தும் என பேசியவர் அதன் பிறகு  திமுக அரசு முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து விட்டார்கள் பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க ஆளுநர்தான் மறுத்து வருகிறார்.

ஆளுநர் சொல்றாரோ இல்லையோ நாங்கள் கையெழுத்து போட விடமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி கூறுகிறார். இதனால் தமிழகத்திற்கு அண்ணாமலை கவர்னரா அல்லது ஆர் என் ரவி கவர்னரா என்று சந்தேகம்  எனக்கு வந்து இருக்கிறது, 

அண்ணாமலை சொல்வதைக் கேட்டு தான் ஆளுநர் செயல்படுகிற நிலைமை உள்ளது. ஆளுநர் பதவி என்பது இரட்டை ஆட்சிக்கு உட்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.49 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை பார்க்க உள்ளோம் மேலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமீத்ஷாவை பார்க்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். இதனால் அவர் கூடிய விரைவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவரை மாற்றும் இடத்திற்கு இந்திய கூட்டணி வரும் என பேசினார்.

இதுநாள் வரை திமுக விசிக மதிமுக இன்னும் பிற திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே அண்ணாமலை செயல்பாடுகளை பார்த்து கதறி வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கதார் மைத்தீனும் கதறி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் அமித்ஷாவை ஜென்ம எதிரி சொல்லி கொண்டு இருந்த நபர்கள் தற்போது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமிட்ஷாவை சந்திப்போம் என கூறியது பலத்த கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.