திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக நீட் விலக்கு என்ற வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. தற்போது நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை கையில் எடுத்து இருக்கிறார். அதிலும் குளறுபடி நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, எதை செய்த்தாலும் உருப்படியாக செய்வதில்லை இந்த திமுக அரசு.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்குபோது நீட் தேர்வை அனுமதித்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் உயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். அந்த நீட் தேர்வை ஒழிக்க திமுகவிற்கு வாக்களியுங்கள் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று கூறியது. ஆனால் இதுவரை அதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நாடகமாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஐம்பது நாட்களில் ஐம்பது லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. இதற்காக கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறும் இந்த திட்டத்தை திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.இதுவரை திமுகவில் ஒன்றை கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர் என கூறும் திமுக 50 லட்சம் வாங்க திண்டாடி வருகிறார்களாம். 50 லட்சம் கையெழுத்து பெற பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது, தமிழக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா என்பவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம், நீட் பற்றிய பொய் பிரசாரம் செய்து. மாணவர்கள் நீட்டுக்கு எதிராக போராட வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து பெரும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பள்ளிக்கூடமா அல்லது அரசியல் மேடையா எனவும் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீட்டை வைத்து திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் செய்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திமுக கட்சி சார்பாக நடத்தும் போராட்டத்தில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள். இதனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கோரினார்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லட்சுமி நாராயணன் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கை தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறி அடுத்த வாரம் வழக்கமான வழக்காக இதனை தாக்கல் செய்யுமாறு கூறி உத்தரவிட்டனர்.