சென்னையில் எதிர் பார்த்த அளவை காட்டிலும் பெரு மழை பெய்ததாக ஆளும் கட்சியினர் கூறி கொண்டு இருக்க தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் உண்மையான நிலவரம் என்ன என்பதை தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறது.இது ஒருபுறம் என்றால் தற்போது சென்னை மக்களின் மன நிலை என்ன என்பது உதயநிதி ஸ்டாலின் மற்றும் மேயர் பிரியா ஆகியோருக்கு நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் மூலம் ஒட்டு மொத்த நாட்டிற்கும் உண்மை நிலவரம் தெரியவந்து இருக்கிறதுக்கு.புயலில் ஆளும் கட்சி சிறப்பாக செயல்படுவதாக சில ஊடகங்கள் மூலமும் நடிகர்கள் மூலமும் தமிழக அரசு மக்களை திசை திருப்பி வருவதாகவும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை என பொதுமக்கள் பலரும் குற்றம் சுமத்தி வந்தனர் இந்த நிலையில் தான் வெள்ளம் பாதித்த வேளச்சேரி மக்களை பார்வையிட உதயநிதி ஸ்டாலின் சென்று இருந்த நிலையில் அங்கு ஆசிரியை ஒருவர் உதயநிதியிடம் ஆதங்கத்தை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை நேற்று உண்டாக்கியது.
குறைகளை சொல்ல வந்த பெண்ணிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் இது தானா என அந்த ஆசிரியை உதயநிதியை நோக்கி எழுப்பிய கேள்வி பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த சென்னை மக்களின் குரலாகவே பார்க்க படுகிறது.ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் பொது வெளியில் அதன் தலைவர்களை நோக்கியே சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்கள் என்றால் வருகின்ற தேர்தலில் கள நிலவரம் என்ன என்பதை இப்போதே அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.இது ஒருபுறம் என்றால் நடிகர் விஷால் தான் பாதிக்கப்பட்ட நிகழ்வை வீடியோவாக வெளியிட அது களத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது, இந்நிலையில் மேயர் பிரியா விஷாலை இது ஒன்றும் சினிமா இல்லை என விஷாலுக்கு பதிலடி கொடுக்க சென்று இப்போது திரை துறையினர் பலரும் திமுகவை நோக்கி கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் நடிகர் இல்லையா நாங்கள் பாஜகவை எதிர்த்து சூர்யா முதல் சத்யராஜ் வரை சினிமா துறையினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் அவர்கள் அமைதியான முறையில் எதிர்கொண்டனர் ஆனால் தற்போது மேயர் பிரியா பேசுவது அழகல்ல என விசாலுக்கு ஆதரவான கருத்துக்கள் சினிமா துறையில் எழுந்து இருக்கின்றன.சென்னை மக்கள் அதிமுக திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி வந்தாலும் எங்கள் நிலை இப்படியே தான் தொடர்கிறது இனியும் வெள்ளம் வந்தால் நாங்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட போவது கிடையாது எங்கள் நிலைக்கு காரணமான இரண்டு கட்சிகளை ஓட விட போவதாக வெளிப்படையாக ஊடகங்களில் பேச தொடங்கி இருக்கின்றனர்.
ஏற்கனவே சென்னையில் வெள்ளம் பாதித்த பல இடங்களில் கடந்த மாநகராட்சி தேர்தலின் போது பாஜக மாநகராட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் அதிக வாக்குகள் பெற்றதுடன் புதிதாக ஒரு மாமன்ற உறுப்பினர் பாஜகவில் இருந்து வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது குறிப்பிடத்தக்கது.எப்போது பார்த்தாலும் மோடி மீது பழியை போட்டு தப்பித்து வந்த திமுக அரசு தற்போது வசமாக மக்கள் மத்தியில் சிக்கி இருப்பதுடன் தற்போது 5000 கோடி நிவாரணம் வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் உண்மை நிலவரத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.