24 special

இணைய உடன்பிறப்பால் சிக்கிய இணைய பிரபலம்

youtuber inbaa,dmk
youtuber inbaa,dmk

திரைத் துறையில் பிரபலமாவதை விட யூடியூப் சேனல் மூலம் பிரபலமாவது தற்போது எளிதாக உள்ளது. கொரோனா காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்ட யூடியூப் சேனல்கள் பலரது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒரு உதவியாகவும் அமைந்துள்ளது யூடியூப் சேனல் மூலம் சிலர் தனது சமையல் திறனையும் கல்வி திறன் மற்றும் பல திறன்களை வெளிப்படுத்த வருகின்றனர் அது மட்டும் இன்றி சிலர் வரலாற்று ரகசியங்கள் ஆன்மீகம் திரைப்படத்தின் பாடல்கள் புது விஷயங்கள் பொது அறிவு என அனைத்தையும் குறித்து வீடியோவாக வெளியிடுகின்றனர்.  


மேலும் காமெடி வீடியோக்கள் வெளியிடும் சேனல்கள் youtube இல் அதிகமாக உள்ளது. ஒரு கடை திறப்பு விழா என்றால் முன்பெல்லாம் நடிகை நடிகர்களை அப்பகுதியில் காணலாம் என்று கூறுவார்கள் ஆனால் தற்பொழுது புதுக்கடைகளை திறப்பு விழாகளில் youtube பிரபலங்கள் பங்கேற்கின்றன. அவர்களை காண்பதற்கும் கூட்டம் கூட்டமாக அவர்களது ரசிகர்கள் கூடும் காட்சிகளும் அவ்வப்போது வெளியாகிறது. எந்த வகையில் பிரபலமானாலும் பிரச்சனை என்பது அனைவருக்கும் பொதுவானது என்பது போன்று சினிமா துறையில் ஒரு பிரபலம் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ அதேபோன்றுதான் youtube இன்ஸ்டாகிராம் என இணையதளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் சில பிரச்சனைகளையும் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஒரு சர்ச்சையை தற்போது ஒரு இன்ஸ்டா பிரபலம் சந்தித்து வருகிறார். 

Youtube மற்றும் இன்ஸ்டாகிராமில் இன்பாஸ் ட்ராக் என இயங்கி வரும் பக்கத்தை செயல்படுத்தி வந்த இன்பா மீது திருச்சி சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் அனைவராலும் அறியப்படுகின்ற ஒரு பிரபலமாவார்! இவர் தனது பக்கத்தில் எந்த ஒரு திறன் வெளிப்பாடு வீடியோக்களையும் பொது அறிவு வரலாற்று என பாடம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு கருத்துக்கள் அடங்கிய வீடியோவையும் பதிவிடவில்லை அதற்கு மாறாக தனது மோனோ ஆக்டிங் எனப்படும் முகபாவனைகளை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்துள்ளார் அதுவும் காதலர்களுக்கு இடையேயான மற்றும் கணவன் மனைவி இடையேயான திருமண உறவுகள் குறித்த வீடியோக்களை தனது முக பாவனைகள் மூலம் பிரதிபலித்து அதனை பதிவிட்டு வந்துள்ளார். 

ஆனால் இவரது முக பாவனைகள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே தவறான எண்ணத்தை ஊக்குவிக்கும் என கூறி திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறித்து திருச்சி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, youtube மட்டும் இன்ஸ்டாகிராமில் இன்பாஸ் ட்ராக் என்கின்ற ஐடி சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போன்ற மோனோ ஆக்டிங் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இவரின் முக பாவனைகள் அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமான வகையிலும் இருப்பதால் இவற்றைப் பார்க்கும் மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்களிடம் மீண்டும் இந்த வீடியோவை பார்க்கத் தூண்டி தவறான வழிக்கு  வித்திடும் அதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் இன்பாவை காவல் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் இளைஞர் இன்பம் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஜேம்ஸ் ஸ்டான்லி என்பவர் டிவிட்டர் மூலம் புகார் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் திமுகவின் ஆதரவாளர் ஆவார்! தற்போது திமுக உடன்பிறப்பால் இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.