24 special

அயல் மாநிலத்திற்கு உதயநிதியை தூக்க போகும் அந்த படை....

udhayanithi, mkstalin
udhayanithi, mkstalin

தவளை தன் வாயால் கெடும் என்பது போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு " இந்த மாநாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பே மிகச் சிறப்பாக இருக்கிறது சனாதனத்தை எதிர்க்கக் கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் ஏனென்றால் டெங்கு மலேரியா போன்றவற்றை நாம் எதிர்க்கக் கூடாது ஒழுக்கத்தான் வேண்டும் அதேபோன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்" என்று கூறியது தேசிய அளவில் விவாத பொருளாக மாறி பல சர்ச்சைகள் எழுந்தது, அதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல தரப்பில் வழக்குகளும் பதியப்பட்டது அந்த வழக்கின் புகார்களில் அமைச்சர் உதயநிதி சனாதனத்தை குறித்து தவறாக பேசி இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


முன்னதாக அமைச்சர் உதயநிதி தரப்பில் சனாதனம் இந்து மதத்தோடு சார்ந்தது அல்ல என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் சனாதனம் என்பது இந்து மதத்தின் வேறு பெயர்கள் தான் என தமிழக பாடப்புத்தகத்தின் குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதாரமாக முன்வைத்து பல வலதுசாரிகள் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியவற்றிற்கு விமர்சனம் செய்து வந்தனர். அதுமட்டுமின்றி, வட இந்தியாவை சேர்ந்த சாமியாரும் சனாதனத்தை தவறாக பேசியவற்றிற்கு அமைச்சர் உதயநிதி மீது கடும் கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அமைச்சருடைய உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதான வழக்கை பாட்னாவில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. முன்னதாக அமைச்ச உதயநிதியின் சனாதன பேச்சு IND கூட்டணியிலும் விமர்சனத்தை பெற்றிருந்தது. அதாவது சமதர்ம சமுதாயம் என்பதை காங்கிரஸ் கட்சியில் ஒருமித்த நிலைப்பாடு! எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உண்டு அனைவரது மத நம்பிக்கையும் நாங்கள் மதிக்கிறோம் அனைவருடைய நம்பிக்கையும் மதிக்கிறோம் என்று பொத்தாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான வேணுகோபால் தெரிவித்தார்.

அதோடு மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் உதயநிதியின் கருத்து அவருடையது ஆனால் அதில் நான் உடன்படவில்லை என்றும் மம்தா பானர்ஜி உதயநிதியின் கருத்திற்கு உடன்படாத வகையிலும் கருத்து தெரிவித்தார். இப்படி உதயநிதி கருத்து பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை பெற்ற நிலையில் IND கூட்டணி ஐந்து மாநிலங்களின் தேர்தலில் தோல்வியை தழுவியது உதயநிதியின் சனாதன பேச்சால்தான் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதனால் IND கூட்டணியில் தற்போது திமுகவிற்கு பாதகமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாட்னா சிறப்பு நீதிமன்றம் சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி அன்று அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் பிடி வாரண்ட் பிறப்பித்து உதயநிதியை கைது செய்ய சிறப்பு படை வரலாம் என்றும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக முழுவதும் திமுகவிற்கு எதிரான அலை வீசி வரும் நிலையில் தற்போது உதயநிதி ஆஜராகும் படி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது அறிவாலய தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு நீதிமன்றத்தில் ஆஜராகும் போது உதயநிதி எப்படி பேச வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் திமுக மூத்த வழக்கறிஞர்களுடன் நடைபெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.