24 special

கணித்த பிரசாந்த் கிஷோர்! எதிர்கட்சிகள் அலறல்!

prashant kishore, mkstalin
prashant kishore, mkstalin

இந்திய நாட்டில் தேர்தல் வேலைகள் பார்ப்பதற்கு என்று பல  அமைப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் கிட்டத்தட்ட பல ஆண்டுகால தேர்தலை நேரடியாக சந்தித்து அதன் மூலம் அனுபவங்களை கொண்டவர்கள்! அப்படி அவர்களுக்கு தேர்தல் மூலம் அனுபவத்தில் கனித்து கூறப்படும் பல செய்திகளும் உண்மையாகவே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இப்படி பல தேர்தல் அனுபவங்களைக் கொண்ட ஒரு பிரபலமான தேர்தல் வியூகம் அமைப்பாளராக செயல்பட்டு வருபவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த முறை 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு சார்பாக தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்து திமுகவை அந்த தேர்தலில் வெற்றி அடைய வைத்தார். இதில் மிக முக்கியமாக அவர் பயன்படுத்திய ஒரு சாதனம் என்றால் அனைவரும் பயன்படுத்தி வந்த மொபைல் போனில் திமுகவிற்கு ஏற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டது. மேலும் தொலைக்காட்சி மூலமாகவும் திமுகவிற்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. இதனை அடுத்து 2021 திமுகவும் ஆட்சியை பிடித்தது ஆனால் ஆட்சியைப் பிடித்ததற்கு பிறகு இருந்து தொடர் சரிவையும் பின்னடைவுகளையும் திமுக சந்தித்து வருகிறது.


தொடர்ச்சியாக மூத்த அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருவதும் அந்த மூத்த அமைச்சர்களின் பல ஊழல் வழக்குகளில் சிக்கி தற்போது வழக்குகளை சந்தித்தும் வருகின்றனர். மேலும் அமலாக்க துறை மற்றும் வருமானவரித்துறையின் சோதனைகளும் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திமுக அரசின் அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் சோதனை என்பது தடாலடியாக உள்ளது. இது மட்டுமின்றி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் கோரிக்கைக்காக உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட வைத்தது திமுக அரசு! இப்படி திமுக பல வகைகளில் சரிவை சந்தித்துக் கொண்டு வரும் நிலையில் அதற்கு நேர் மாறாக தமிழக பாஜக தன் பக்கம் தன் செல்வாக்கை உயர்த்தி கொண்டே வந்தது. 2021 இல் தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்ட பிறகு பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் மேலோங்கி இருப்பதும் தமிழக முழுவதும் தற்போது பாஜக ஒரு அறியப்பட்ட கட்சியாகவும் மாறி உள்ளது. 

இந்த நிலையில் 2024 இல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வேலை பார்க்கும் படியும் தேர்தல் வியூகங்களை அமைக்கும் படியும் மீண்டும் திமுக பிரசாந்த் கிஷோரை அழைத்துள்ளது ஆனால் பிரசாந்த் கிஷோர் தொடர்ச்சியாக திமுகவின் அழைப்பை ஏற்க காலம் தாழ்த்தி வந்த நிலையில் இந்த முறை தமிழகத்தில் திமுகவிற்கு சார்பாக வேலை பார்க்க இயலாது என்று தெரிவித்துள்ளார் இதனை அடுத்து காங்கிரசிற்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் தேர்தலில் வேலை பார்க்க உள்ளார் என்ற ஒரு செய்தியும் வெளியானது. ஆனால் அதுவும் பிரசாந்த் கிஷோரால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்போது எதிர்க்கட்சிகள் அனைவரும் அதிரும் வகையிலான ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அமோக வெற்றி பெறும் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தான் ஆட்சி பொறுப்பை ஏற்பார் என்று பிரசாந்த் கிஷோர் தன் கணிப்பில் கூறியிருப்பது மத்தியில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள IND கூட்டணியின் தலையில் இடியை இறக்கி உள்ளது. அதோடு பிரசாந்த் கிஷோர் இப்படி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் அவர் மீது கோபமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அறிவாலயத்திற்கு நேராக சொல்லாமல் மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் தோல்வி உறுதி எனக்கூறியுள்ளது முதல்வரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.