24 special

கட்சி பற்றி மேஜைக்கு வந்த ரிப்போர்ட் ...!திருச்சி திமுக மாநாட்டின் பின்னணி...!

mkstalin
mkstalin

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த தலைவர்கள் போட்டியிட வேண்டும் என்பதற்கான முக்கிய முடிவுகள் பல கூட்டங்கள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவதாக  தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் கட்சியின் நிகழ்வுகள் அனைத்தும் அவ்வாறு இருக்கின்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் தனது நடை பயணத்தை துவங்குவது மற்றும் ஆளுநர் ஆர் என் ரவி ராமநாதபுரத்திற்கு சென்று பார்வையிடுவது, நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது  மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் ராமநாதபுரத்தை குறிவைத்து வேலை செய்வது என ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடுவதற்கு அனைத்து அறிகுறிகளும் தெரிகிறது.


மேலும் நடைபயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.மேலும் இந்த நடை பயணம் தேர்தலுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும்  வீட்டிற்கு ஒருவர் நடை பயணத்தில் கலந்து கொள்ளும் வகையில் நடை பயணம் அமைய வேண்டும் என்றும் பயணத்தின் முடிவில் சுமார் ஒரு கோடி பேர் பங்கு பெற்றதற்கு அத்தாட்சியாக அவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த நடை பயணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை எடுத்துரைப்பதாக கூறுவதும் வருகின்ற தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதை காட்டுகிறது.

இந்தநிலையில் பிரதமர்  நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து தரப்புகளும் உறுதி செய்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் இதுகுறித்து  தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர் முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் மேலும் அந்தக் கூட்டத்தில் நாம் எப்படியாவது ராமநாதபுரத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என முதலமைச்சர்  கூறியதாக  தெரிகிறது. இதன் காரணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராமநாதபுரத்தில் இருக்கும் மீனவ சங்கங்களை நேரில் சந்திப்பதாகவும் மேலும் ராமநாதபுர திமுக நிர்வாகிகளை தீவிரமாக களத்தில் இறங்குவதற்கு அலர்ட் செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது மட்டுமில்லாமல் இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு அறிவிப்பு வரும் பட்சத்தில் அங்கு நாம் தான் வெற்றி பெற வேண்டும் அதற்கான களப்பணியில் தீவிரமாக இறங்க வேண்டும் என தனது ராமநாதபுரம் முக்கிய பொறுப்பாளர்களுக்கு அறிவாலய தரப்பில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாகவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட் சென்று மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் மீனவ சங்கங்களை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல திட்டங்களை வகுத்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாகத்தான் மீனவர்கள் பாதுகாப்பு மாநாடு சிறுபான்மையினர் மாநாடு என நடத்தி அதில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த முக்கிய புள்ளிகளை முதல்வர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது, இப்படி ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சத்தில் முதல்வர்  மீனவர்கள் சங்க மாநாட்டை ராமேஸ்வரத்தில் நடத்த இருப்பதாகவும் எப்படியம் பாஜக தமிழகத்தில் ஒரு எம்.பி தொகுதி கூட குறிப்பாக பிரதமரே போட்டியிட்டாலும் வெற்றிபெற கூடாது என்ற நோக்கத்தில் முதல்வர் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், தென் மண்டல முக்கிய தலைவர்களை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது