நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணியில் கூடியது, மேலும் அந்தக் கூட்டணியும் வலுவாக இல்லாத காரணத்தினால் யார் பிரதமராக போட்டியிடுவர்கள் என்பதில் குளறுபடி உள்ள காரணத்தினாலும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த கூட்டத்தை எப்போது கூட்டுவது என்ற யோசனையிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை பாதயாத்திரை துவங்குவதற்கு முன்பாக திருச்சியில் தேர்தல் வேலைகளை துவங்கி விட வேண்டும் என பெரிய அளவில் அனைத்து திமுக மாவட்ட நிர்வாகிகள், பூத் கமிட்டி ஏஜென்ட்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைத்து பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது திமுக. இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை ஏற்றுப் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் கட்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் யார் என்ன அவதூறுகளை பரப்பினாலும் கண்டுகொள்ளாதீர்கள் என்று பேசினார்.
அதாவது இதுவரை திமுகவிற்கு திருச்சி என்பது அவர்களின் அரசியல் திருப்புமுனையாகவும் வெற்றிக்கு வழிவகுக்கும் மாவட்டமாகவும் இருந்து வந்துள்ளதால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் கள பணிகளை திருச்சியில் இருந்து தொடங்குவதே நல்லது என்று நினைத்து முதல்வர் மு க ஸ்டாலின் இந்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெரும் மாநாட்டை குறுகிய காலத்தில் நடத்த வேண்டும் என்று கூறிய போது உடனடியாக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் நேரு அவரை பாராட்டுவது என்னையே பாராட்டுவது போன்று என்று முதல்வர் மூத்த அமைச்சரான நேருவை முதல்வர் மிகவும் புகழ்ந்து தள்ளினார்.
எதற்காக இந்த அவசர ஏற்பாடு என்ற விசாரித்த பின்னணியில் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் நடை பயணத்தை மேற்கொள்வதற்கான தேதியை தெரிவித்தார் அப்பொழுது இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என திமுக தலைமை நினைக்கவில்லை, ஆனால் அண்ணாமலை நடைப்பயணத்திற்கு நாளுக்கு நாள் இளைஞர்கள் வரவேற்பு அதிகரித்தது என்ற தகவல் உளவுத்துறை மூலமாக திமுக அரசுக்கு கிடைத்தது. உடனே நாம் அதற்குள் முந்திக்கொண்டு தேர்தல் வேலைகளை துவக்க வேண்டும் என அறிவாலய தரப்பு இந்த அவசர ஏற்பாடு செய்துள்ளது என அறிவாலய வட்டார தகவல்கள் கிடைக்கின்றன.
நேற்றைய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர், 'பல விவரங்கள் உங்களைப் பற்றி விசாரிக்கப்பட்ட பிறகு தான் தற்போது உங்கள் கையில் வாக்குச்சாவடி அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கூறி சமூக வலைதளத்தை பிரச்சாரத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள் மேலும் அதே சமூக வலைதளத்தில் பரப்பப்படும் செய்திகளை கண்டு துவண்டு விடாமல் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்' என்று அறிவுரை வழங்கியுள்ளார்..
அண்ணாமலையின் நடைபயணம் மற்றும் திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டும் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இது தொண்டர்களையும் மிகவும் சோர்வடைய வைத்துள்ளது என்பதை தெரிந்தே அவர்கள் உற்சாகப்படுத்துவதற்காக இது போன்ற கூட்டத்தை திடீரென்று ஏற்பாடு செய்து நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்படாமல் இருக்கவேண்டும் என்ற முயற்சிகளின் முதற்கட்ட வேலைதான் இது என திமுகவினர் கூறுகின்றனர்.
மேலும் உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் படி தற்போது கட்சியின் கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதால், திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை போன்று பல மாநாடுகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என அறிவாலயத் தரப்பு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.