24 special

"அப்போ புரியல இப்போ புரியுது" வைரமுத்துவை வைச்சு செய்யும் பாஜகவினர்...!

Vairamuthu
Vairamuthu

தமிழகத்தில் தனது கருத்துக்கள் செயல்பாடுகள் மூலம் சமூக வலைத்தளத்தில் அதிகம் சிக்கி சிதையும் நபர்களில் ஒருவர் வைரமுத்து, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த வைரமுத்து, பாடகி சின்மயி தெரிவித்த குற்றசாட்டு மூலம் வைரமுத்துவின் பிம்பம் சரிந்தது. கேரளா அரசு அறிவித்த விருதையும் திரும்ப பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில் வைரமுத்து மற்றொரு விவாகாரத்தில் சிக்கியுள்ளார், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தாமல் வேண்டும் என்றே பல்வேறு முறை மாநகராட்சி சார்பில் தெரிவித்த பின்பும் சொத்து வரியை செலுத்தாமல் வைரமுத்து இருந்து வந்தது தெரியவந்தது.

சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வைரமுத்துக்கு சொந்தமான திருமண மண்டபமான பொன்மணி மாளிகை இயங்கி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள அந்த மண்டபத்திற்கு வைரமுத்து கடந்த 4 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் வரை சொத்து வரி நிலுவையில் இருந்த நிலையில் பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் வைரமுத்து காலம் தாழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில்  அதிகாரிகள் அத்திருமண மண்டபத்திற்கு சீல் வைக்க வந்தனர். இதுவரை 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் சொத்து வரி செலத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதையடுத்து உடனடியாக சொத்து வரியை கட்டியுள்ளார் வைரமுத்து.

இந்த சூழலில் வைரமுத்து தெரிவித்த பல்வேறு கருத்துக்களை சுட்டிக்காட்டு பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர், வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது  தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? என குறிப்பிட்டு இருந்தார் வைரமுத்து.

இதனை தற்போது ரிட்விட் செய்து ஒழுங்காக அரசிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை முறையாக செலுத்த வக்கு இல்லை இதில் இவர் மொழி பிரச்சனை குறித்து பேசுகிறார், ஊரில் தமிழர்களுக்கு அறிவுரை வழங்கும் வைரமுத்து போன்றோர் முதலில் உங்களை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள் என கடினமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர்.