தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவரை ஊடகங்கள் முன்னிலை படுத்தும் விதம் குறித்தும் காமெடியாக பேசிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இது குறித்து அண்ணாமலை பேசியது பின்வருமாறு :-"மோடி ஜியை நவீன கால சிற்பி என்று சொல்லாமல், யாரை சொல்வீர்கள்? பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சொல்கிறார்,
'இந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவோட வெளியுறவு கொள்கையை பாருங்க, மோடியை பாருங்க யாருக்கும் பயப்படறது கிடையாது (அவர்). நேரடியா பேசறார். அமெரிக்கா காரன்கிட்ட நேரடியா பேசறார்.ரஷ்யாகாரன் கிட்ட நேரடியா பேசறார். அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு பாகிஸ்தான்ல கிடைக்க மாட்டேன்கிறது'ன்னு. அந்த அளவுக்கு மோடியின் ஆளுமை வளர்ந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 12,600 மாணவர்கள் உக்ரைன்ல இருக்கறாங்க. அதை நாம எப்படி காப்பாத்தினோம், டிஎம்கே எப்படி காப்பாத்தினதுன்னு பாருங்க. நாம எப்படி காப்பாத்தினோ? நம்ம மத்திய அமைச்சரவையில இருக்கிற முக்கியமான அமைச்சர்கள் 5 பேரை உக்ரைனுக்கு பக்கத்து நாடுகளுக்கு அனுப்பினோம்.
அங்கேயே தங்கி, அங்கே இருக்கிற பிரச்சினைகளை கையாண்டு, ஒவ்வொரு மாணவரையும் கொண்டு வந்து., இதற்கிடையில் தேவைப்படும்போது மோடி ஜி ரஷ்ய அதிபர்ட்ட பேசறார், உக்ரைன் அதிபர்ட்ட பேசறார் - இந்திய மாணவர்கள் இருக்கிற இடங்களில் யுத்தத்தை நிறுத்தி, மாணவர்களை வெளியே கொண்டு வந்து, அங்கே இருந்து கீறல் இல்லாம இங்கே கொண்டு வந்தார்.
பாகிஸ்தான் பங்களாதேஷ் காரங்களெல்லாம் இந்தியாவோடு வர்றாங்க. ஆனால் இங்கே இருக்கக் கூடிய முதலமைச்சர், 'நானும் சண்டைக்கு போறேன், நானும் போட்டிக்கு போறேன், நானும் வீட்ல ஜிம்ல எக்ஸர்ஸைஸ்லாம் பண்றேன், எனக்கும் பலம் இருக்குன்னு காட்ட, நாலு மாநில அமைச்சர்கள் குழுவை போட்டு, அவங்க ஒரு ஃப்ளைட்டை பிடிச்சு டில்லிக்கு போறாங்க.
டில்லில இருக்கக் கூடிய தமிழ்நாடு பவன்ல, 2 நாள் மத்தியான சப்பாடு - ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டாங்க. 2 நாள் முடிச்சிட்டு, ரெண்டாவது நாள் நைட்டு, நாமளாவே (மத்திய அரசு) கூட்டிட்டு வந்து நாமளாவே ஃப்ளைட்ல டிக்கட் போட்டு சென்னைக்கு அனுப்பற குழந்தைங்களோட ஃப்ளைட்ல இவங்களும் மூணு சீட் போட்டு ஏறினாங்க.
சென்னை ஏர்போர்ட்ல வந்து இறங்கினாங்க. அவங்க தான் டிவி சேனல் மூணு நாலு வச்சிருக்காங்கள்ல தலைவர் என்ன பண்ணார்ன்னு தெரியுங்களா? ரஷ்யா அதிபர் பய்ந்துட்டார். உக்ரைன் காரர் ஓடியே போய்ட்டார்'... இதெல்லாம் ஒரு பொழப்பா?. இதை செய்ய ஒரு அரசியல் கட்சி வேணுமா? இதை சொல்வதற்கு ஒரு முதலமைச்சர் வேணுமா?
ஆனால் மோடி எங்கேயும் வந்து ஒரு முறை கூட, 'நான் தான் செய்தேன்' என்று ஒரு முறை கூட இந்த 8 ஆண்டுகளில் சொன்னது கிடையாது. ஏன்னா... செய்வது எங்களுடைய கடமை. பெருமைப்பட்டுக் கொள்வது இந்த (மோடி ) அரசின் நோக்கம் கிடையாது"
"ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் ஒரு கல்யாண மண்டபம் மாதிரி. அங்கே யார் வேணா பேசலாம்" என குறிப்பிட்டு பேசினார் அண்ணாமலை. துபாய் பஞ்சாயத்து போல் அடுத்து முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து செல்லும் போது அடுத்த பஞ்சாயத்து இருக்கிறதோ.