24 special

தமிழக பாஜகவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி தலைமை!

Annamalai , jp naada
Annamalai , jp naada

மக்கள் மன நிலையை அறிய ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு நெருக்கமான அமைப்புகள் மூலம் சர்வே எடுப்பது வழக்கம், அதுவே ஆட்சியில் இருக்கும் கட்சிகள் உளவு அமைப்புகள் மூலமாக சர்வே எடுப்பதும் வழக்கம் அந்த வகையில் பாஜக மேலிடம் இரண்டு சர்வேக்களை தமிழகத்தில் எடுத்துள்ளது, அதில் ஆளும் திமுகவின் ஆட்சியை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் எனவும் மத்திய அரசின் ஆட்சியை எவ்வாறு பார்க்கிறார்கள் எனவும் இரண்டு தனி தனி குழுக்கம் மூலம் ஆய்வு செய்துள்ளனர்.


இதில் டெல்லி தலைமை ஆச்சர்யம் அடையும் வகையில் மாற்றங்கள் அறங்கேரி இருக்கின்றன, திமுக அரசின் மீது 30 % மக்கள் நேரடியாக அதிர்ப்தியை பதிவு செய்து இருக்கிறார்கள் 20% மக்கள் திமுக ஆட்சி நலமாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருக்கின்றனர், இதில் திமுகவிற்கு மாற்றாக அதிமுக இருக்கும் என 22% மக்களும் பாஜக என 16% மக்கள் கருத்து தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான் சர்வே முடிவுகள் அதன் தொடர்சியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஒருவரை தமிழகத்திற்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது, திமுக அரசின் தவறான செயல்பாடுகளை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கண்டும் காணாமல் வாய் மூடி இருக்கும் நிலையில் பாஜகவினர் மட்டுமே கண்டிப்பதாக சாமனிய மக்கள் கருதுகிறார்களாம்.

அதிமுகவை கைப்பற்றுவதில்தான் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் திமுகவை எதிர்ப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, நெடுஞ்சாலைதுறை டெண்டரில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ந்து இருந்தார், இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார், இந்த சூழலில் திடீர் என ஆர் எஸ் பாரதி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை மாநில அரசே விசாரிக்கலாம் என நீதிமன்றத்தில் பல்டி அடித்தார்.

இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக இரண்டும் கூட்டணி சேர்ந்து இருப்பதாக டெல்லி சந்தேகம் அடைந்து இருக்கிறது, இந்த சூழலில்தான் அதிமுகவில் உள்ள பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் தனித்து திமுக அரசின் மீது நேரடியாக விமர்சனம் வைக்கவும் ஆளும் அரசு தவறு செய்யும் இடங்களை மக்களிடம் பொது கூட்டம், செய்தியாளர் சந்திப்பு என எங்கெல்லாம்  வாய்ப்பு கிடைக்கிறதோ அக்கெல்லாம் விமர்சனம் செய்ய பாஜக டெல்லி தலைமை அறிவுறுத்தி இருக்கிறதாம்.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதன் நிர்வாகிகள் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றனர், இந்த சூழலில் டெல்லியும் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்யவும் மக்கள் மத்தியில் ஆளும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் அறிவுறுத்தி இருப்பதால் இன்னும் மிக தீவிரமாக களத்தில் இறங்க இருக்கிறதாம் தமிழக பாஜக.

விரைவில் செயல்படாத மாவட்ட நிர்வாகிகள் தலைவர்கள் போன்றோரை மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய இருக்கிறார்களாம் அதோடு மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்க இருப்பதால் அதிரடியாக விரைவில் பாஜக மாநிலம் முழுவதும் களப்பணியாற்ற இருக்கிறதாம்.

பாஜகவை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறது அப்படி எடப்பாடி பழனிசாமி தரப்பு முரண்டு பிடித்தால், பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன்,விஜயகாந்த், கிருஷ்ணசாமி இன்னும் பிற தலைவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் தயாராக இருக்கிறதாம் ஏற்கனவே தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெரிதாக வெற்றி பெறவில்லை, பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே சொந்த முயற்சியில் வெற்றி பெற்றார் எனவே தமிழகத்தில் இந்த முறை 5 இடங்கள் கிடைத்தால் கூட லாபம் என்று கணக்கிட்டு இருக்கிறதாம்.