Cinema

"அந்த ஒரு வார்த்தையால்" தானாக வெளியேறிய பிக் பாஸ் பிரபலம்...!

kamalhassan
kamalhassan

பிக் பாஸ் சீசன் 7 இந்த மாதம் 1ம் தேதி தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திலேயே நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் இடையே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்காது. ஆனால் இந்த சீஸனின் முதல் வாரத்திலேயே எவிக்ஷனை அறிவித்து ரசிகர்களை ஷாக்காகியது பிக் பாஸ்.பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று அனன்யா முதல் ஆளாக எலிமினேஷன் ஆகினார். அனன்யா மக்களால் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறியது, ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை கொடுத்துள்ளது. எதிர்பார்த்தது பிரதீப் ஆண்டனி ஆனால் மக்களிடம் நிறைய வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். ஒவ்வொரு சீசனிலும் பல சுவாரசியம் தொடங்கும் அது போல் இந்த சீசனிலும் தொடங்கிவிட்டது.


கடந்த சீசனில் ஜி.பி முது தன் மகளை காண வேண்டும் என்று அழைத்து பிக் பாஸ்ஸிடடம் முறையிட்டு வீட்டை விடு தானாகவே வெளியேறினார். ஆனாலும் ஜிபி முத்துவிற்கு அதிகளவில் மக்கள் வாக்குறுதிகளை கொடுத்தனர் இருந்து ஜிபி முத்தால் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது கூறி வெளியேறினார். அதுபோலவே தற்போது இந்த சீசனில் பவா செல்லத்துரை தானாக வெளியேறினார். தன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை என்றும், நெஞ்சு வலி வருகிறது என்றும் கூறி வீட்டிலிருந்து நான் வெளியேற வேண்டும் என பிக் பாஸ் இடம் முறையிட்டார்.நேற்று இரவு பவா செல்லத்துரையை சமாதானம் செய்து நாளை வந்து தன்னுடைய முடிவை கூறும்படி பிக் பாஸ் கூறினார். அதன்படியே இன்று தன்னுடைய முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியேறியே ஆகவேண்டும் என்றும் பவா செல்லத்துரை கூறினார். இதன்பின் பிக் பாஸ் மற்றும் பவா செல்லத்துரை இடையே பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், இறுதியில் பவா செல்லத்துரை தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால், பிக் பாஸ் சரி என கூறி பவா செல்லத்துரையை வெளியே அனுப்பி வைத்துள்ளார். பவா செல்லத்துரையின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. 

புதிய கேப்டன் சரவணன் இவரை ‘சோம்பேறி’ என கூறியதால் மனமுடைந்து இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் படிப்பு தேவையில்லை என்பது போல் இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதேபோல் இந்த பிக் பாஸ் சீசன் தொடங்கியதும் சமூக வலைத்தளத்தில் வைரலானவர் ஜோவிகா, கடந்த சீசனில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்ட நாள் முதலே அவர் மற்றவர்களிடம் வாக்குவாதம் மற்றும் பரபரப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்றார். ஆனாலும் வனிதாவால் இறுதி வரை செல்ல முடியவில்லை. தற்போது இந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தான் ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சியில் சலசலப்பை உண்டாக்கி கொண்டு செல்கிறார். இவரது காட்சிகள் சமூக தளத்தில் வைரலாக மகளுக்கு தப்பாமல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.