![SUMAN KUMARI, ARMY](https://www.tnnews24air.com/storage/gallery/csFcskQURyuUP5bu8lwKWSJdXmaaRk3LsPV5SB6f.jpg)
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பெண்களின் நிலைமை வேறு மாதிரி இருந்தது, இந்த தொழில்களில் மட்டுமே பெண்கள் பணியாற்ற வேண்டும் இவற்றிற்கெல்லாம் அவர்கள் வரக்கூடாது என்ற வகையிலான கருத்துக்களும் அதற்கேற்ற வகையில் ஆன திட்டங்களுமே செயல்பாட்டில் இருந்தது மேலும் பெண்களைப் பெற்றோர்களும் தன் பெண் குழந்தை இந்த துறைக்கு மட்டுமே செல்ல வேண்டும் இந்த துறைக்கு எல்லாம் சொல்லக்கூடாது என்ற ஒரு வரையறைகளையும் விதித்து வந்தனர் ஏனென்றால் அவர்கள் வேண்டாம் என்று கூறுகின்ற துறைகளில் பெண்களுக்கு கடினம் அவர்களால் முடியாது அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையே நிலவி வந்தது! ஆனால் தற்போது இந்த சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. பலத்துறைகளில் பெண்கள் தங்கள் சாதனைகளை படைத்து வருகிறார்கள் மேலும் ஒரு காலத்தில் எந்த துறை எல்லாம் பெண்களுக்கு ஒத்து வராது இதில் எல்லாம் பெண்களால் பணியாற்ற முடியாது என்று கூறப்பட்டது அந்த துறைகள் அனைத்திலும் தற்போது பெண்கள் தங்கள் முயற்சிகளை முன்வைத்து அதில் வெற்றியையும் கண்டு வருகிறார்கள்.
அப்படி பெண்களால் இந்த துறையில் எவ்வளவு முயற்சி போட்டாலும் சாதனை படிக்கவே முடியாது என்று கூறப்பட்டு வந்த ஒரு துறை தான் ராணுவ துறை ஆனால் அதிலும் தற்போது பெண்கள் அதிக அளவில் பங்கேற்று தங்கள் வெற்றியை நிலைநாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கும் வகையில் இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமன் குமாரியின் சாதனைகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது!!! அந்த பெண் யார் என்று உங்களுக்கு தெரியுமா???அவர் தான் சுமன் குமாரி, மேலும் இவர் BSF துப்பாக்கி சுடும் பயிற்சியில் 'பயிற்றுவிப்பாளர் தரம்' பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கான துப்பாக்கி சூடும் பயிற்சி அவரின் ஊரில் உள்ள மத்திய ராணுவ பயிற்சி பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 57 ராணுவர்கள் கலந்து கொண்டனர் அதில் சுமன் குமாரியும் ஒருவர். அதோடு இந்த பயிற்சி பள்ளியில் முதல் இடம் பிடித்து வச்ச குறி தப்பாது என்ற சிறப்பு பெயரையும் பெற்றுள்ளார். மேலும் மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடத்தையும் பெற்றுள்ளார் இந்த சுமன் குமாரி.
1965 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு உருவாக்கப்பட்ட ஆண்டிலிருந்து பெண் ஒருவர் இந்த சிறப்பை பெற்றுள்ளார் என்பது இதுவே முதன் முறையாகும். 56 வீரர்களை தள்ளி முதல் இடத்தை பெற்றுள்ள இந்த சுமன் குமாரி இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர், BSF இன் தொடக்க பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார், ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தலை பார்த்து துப்பாக்கி சூடும் பயிற்சியில் சேர விரும்பி ராணுவத்தில் சேர்ந்து பஞ்சாபில் ஒரு படையினருக்கு தலைமை தாங்கியுள்ளார். ஆனால் அது மிகவும் எளிதானதாக இல்லை. பல முயற்சிகளுக்கு பின்னர் சுமன் குமாரிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. மிகவும் கடினமான இந்த பயிற்சியில் அதிக உடல் வலிமையும் மனவலிமையும் கொண்டு முதல் இடம் பிடித்த சுமன் குமாரியை பாராட்டித்தான் ஆக வேண்டும்!!! பெண்களுக்கு மன வலிமையும், செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் எதையும் செய்து விடலாம் என்பதற்கு இவரை ஒரு சான்றாக உள்ளார். மேலும் பல பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாகவும் உள்ளார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்ற வருகிறது!!!