நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. இதற்கான வேலைகளை தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தீயாக செய்து வருகிறது. இந்நிலையில் பாஜகவின் பலவீனம் என்ன என்பது குறித்த கேள்விக்கு தேர்தல் ஆலோசகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்தியா முழுவதும் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக மாநில கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் தேதிகள் விரைவில் வெளியாகஉள்ளது. இதற்கிடையில் தேர்தல் ஆலோசகர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அதில், பாஜகவின் பலம் மற்றும் பலவீனம் குறித்து கூறியுள்ளார்.
ஜனநாயகம் ஆபத்தில் இருப்பது போன்ற கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், பொதுமக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு கட்சிக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு கட்சிக்கும் வாக்களிப்பதை நாம் பார்க்கிறோம். நீங்கள் கிராம புறத்தில் உள்ள மக்கிடம் என் ஒருவருக்கே வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டால் மக்கள் கூறுவது ஆட்சியானது ஒருவரிடம் இருக்கக்கூடாது மாற்றம் வேணும் என்று கூறுவார்கள். மத்திய அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று பேசினால் அதற்கு எடுத்துக்காட்டாக இந்திரா காந்தியின் ஆட்சி காலத்திலும் நடந்துள்ளதே என்பதே நமக்குக் கிடைக்கும் பதிலாக இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பாஜகவின் பலம் குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், பாஜகவை காட்டிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் வலிமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும் இது பாஜகவுக்கே உதவிகரமாக இருக்கும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அதேபோல வரும் காலங்களில் தேர்தலில் பாஜகவை பாதிக்கக்கூடிய மிக பெரிய பலவீனம் என்றால் அது என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பிரதமர் மோடியை அதிகமாகச் சார்ந்து இருப்பதே பாஜகவின் பலவீனம். மோடிக்குப் பிறகு பாஜகவில் யார் தலைவராக வரப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விஷயம் எனக்கு உறுதியாகவே தெரியும். அதாவது மோடிக்குப் பிறகு பாஜகவில் தலைவராக வருபவர் மோடியை விட தீவிர வலதுசாரியாகவே இருப்பார்" என்றார்.
மேலும், பல்வேறு கட்சிகளும் சாதி வாரி கணக்கெடுப்பை கொண்டுவரவேண்டும் என்றும் அதில் வரும் நம்பர்களை வைத்தே இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து கேள்விக்கு அவர், "சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கீடு என்பதைப் பிராந்திய கட்சி முன்னெடுக்கலாம். அதன் மூலம் அவர்களுக்குப் பலனும் கூட கிடைக்கலாம். ஆனால், தேசிய கட்சிகள் இது குறித்துப் பேசினார் பெரியளவில் பலன் கிடைக்காது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் இந்த முழக்கத்துடன் தான் தேர்தலை எதிர்கொண்டது. இதற்குக் காங்கிரஸ் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது அனைவருக்கும் தெரியும்" என்றார்.