மற்று கோவில் மற்றும் திருத்தலங்களை விட கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்றது ஆண்டுதோறும் இந்த கோவில் நடைதிறக்கப்படாமல் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தின் போது மட்டுமே இக்கோவலின் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் இதனாலே கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மாலை அணிவித்து கிட்டத்தட்ட 48 நாள் அதாவது ஒரு மண்டலம் வரை பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து சபரிமலை யாத்திரை சென்று 18 படியேறி ஐயப்ப சுவாமியை தரிசிப்பது வழக்கமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசிப்பதற்காக மார்கழி மாதத்தின் தொடக்கத்திலிருந்து மாலை அணிவித்து விரதம் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் கேரளாவிற்கு சென்று வருவார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் வருவதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள் பெருமளவில் ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து மாலை அணிவித்து இருமுடி கட்டி கேரளாவிற்கு பாதயாத்திரை மூலமாகவும் வாகனங்கள் அமைத்து சென்று வருவர். அதன்படி கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் அதாவது ஐயப்பன் சீசன் என்று கூறப்படுகின்ற காலத்தில் ரூபாய் 320 கோடிக்கும் அதிகமான தொகை வருமானம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐயப்பனை தரிசிப்பதற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி உள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் திக்கு முக்காட வைக்கும் வகையில் ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் இந்த வருடம் கடந்த வருடத்தின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இக்கோவிலின் தேவஸ்தானம் அதாவது நிர்வாகம் பூப்படைந்த பெண்களை ஐயப்பனை தரிசிப்பதற்கு அனுமதிப்பதில்லை! இதற்கான எதிர்ப்புகளும் போராட்டங்களும் விமர்சனங்களும் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது ஒரு கட்டத்தில் நீதிமன்றங்களே பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கலாம் என்ற ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகும் இந்த கோவில் நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களை இதுவரையிலும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்காமல் இருந்து வருகிறது. இதனால் கோபம் அடைந்த சில தரப்பு பெண்கள் குழுவாக அமைத்து ஐயப்பனை தரிசிப்பதற்காக அங்கு சென்று சில வாக்குவாதங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதும் செய்திகளில் பரபரப்பாக வெளியானது. என்னதான் போராட்டங்கள் கடுமையாக வலுப்பெற்றாலும் பெண்கள் இதுவரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு சிலர் ஆதரிக்கும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கு சென்று கொண்டிருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கேரளா அரசு எதுவுமே செய்யாமல் தவிர்த்து விட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. 30 முதல் 40 நாட்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து வந்தா ஐயப்ப பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாமல் பல மணி நேரம் காக்க வைத்து 40 வருடத்தில் இது போன்ற நிலையை நாங்கள் சந்தித்ததில்லை என பாதியிலேயே மாலையை கழட்டி விரதத்தை முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது! மேலும் இது குறித்து ஐயப்ப பக்தர்களால் பல கண்டனங்கள் முன்வைக்கப்பட்டுகிறது. கேரளா அரசு திட்டமிட்டு ஐயப்ப பக்தர்களை பழி வாங்குகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.