
அக்காலம் தொட்டு காலம் வரை தமிழக குடும்ப பெண்களின் முக்கிய பொழுதுபோக்காக இருப்பவை சீரியலும் படங்களுமே! இரண்டும் இன்றளவும் அனைத்து குடும்ப பெண்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டிற்கும் இடையே அமைதியான ஒரு போர் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் சின்னத்திரை என்பது பொதுவாக சிறிய அளவிலான பட்ஜெட்டை கொண்டிருப்பது, ஆனால் வெள்ளித்திரை என்பது அதிக அளவிலான பட்ஜெட்டிலும் மாறுபட்ட கதை சூழலையும் வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும். அதுமட்டுமின்றி சின்னத் திரையில் இருந்து ஒரு நடிகையோ நடிகரோ வெள்ளி திரைக்கு சென்றால் மிகப் பெரிய அளவில் பார்க்கப்படுவார்கள் அதிக கவனத்தையும் பெறுவார்.
ஆனால் அதே சமயத்தில் வெள்ளித்திரையில் இருந்த ஒரு பிரபலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார் என்றால் என்ன ஆயிற்று அவருக்கு படங்கள் வருவதில்லையா நடிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லையா அதனால் தான் சின்னத்திரைக்கு வந்து விட்டாரா என்று கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பர். ஏனென்றால் சின்னத்திரை ஒரு குறிப்பிட்ட வீட்டில் குடும்பம் சார்ந்த கதையாக தான் இருக்கும் ஆனால் அது வெள்ளித்திரை அதுபோன்று அல்ல என்ற மனப்பான்மை இன்றளவும் பலரது மத்தியில் மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வெள்ளித்திரையின் ஏதாவது ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா அல்லது வெற்றி விழா, விருது வழங்கும் விழா போன்றவை அதிகளவிலான வரவேற்பு கொண்டிருக்கும் அதே சமயத்தில் சின்னத் திரையில் நடத்தப்படும் விருது வழங்கும் விழா அந்தளவிற்கான வரவேற்பை இதுவரை பெற்றதில்லை செய்திகளிலும் பரபரப்பாக பேசப்படவில்லை.
இதற்கு என்ன காரணமாக பலவற்றை கூறலாம்! அதாவது இவ்விரண்டில் ஒதுக்கப்படும் பணத்தின் மதிப்பு தான் காரணமா அல்லது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடிக்கும் நடிகை நடிகர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தான் இந்த வேறுபாட்டை நிர்வகிக்கிறதா அல்லது அவர்கள் நடிப்பதற்கு போடும் உழைப்பை வைத்து எந்த துறை உயர்ந்தது என்ற நிர்ணயிக்கிறார்களா என்று தெரியவில்லை! ஆனால் தற்பொழுது வெள்ளித்திரையில் எடுக்கப்படும் ஒரு படத்திற்கு ஒதுக்கப்படும் பண மதிப்பு அல்லது அந்த படத்தில் நடிப்பதற்கு வழங்கப்படும் ஊதியம் என்பது அதிகமாக இருந்தாலும் வெள்ளித்திரையில் போடப்படும் அதே உழைப்பை நாங்கள் சின்னத்திரையிலும் போட்டு மக்களுக்கு பொழுது போக்கை வழங்குவோம் என்று ஒரு சில சீரியல்கள் மும்முற வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சின்னத்திரையில் எடுக்கப்படும் சில காட்சிகளில் கூட வெள்ளி துறையை போன்று அதிக கடினங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால் தற்பொழுது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சில முக்கிய சீரியல்களில் பல ஆக்சன், சேசிங் மற்றும் அதிரடியான காட்சிகளையும் இடம் பெற வைக்கின்றனர் அது மட்டும் இன்றி விபத்து காட்சிகளையும் வைக்கின்றனர் இந்த காட்சிகளை எடுப்பதற்கு அதிக அளவிலான சிரமங்களையும் கடின உழைப்பையும் அந்த சீரியல் நடிகை நடிகர்கள் போட வேண்டியதாக உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இது குறித்த வீடியோ ஒன்று வைரலாக வருகிறது, பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது ஒரு பெண் தனது குடும்பத்தை அப்பா துணை இல்லாமல் அண்ணன், தங்கை, தம்பி என மூவரையும் எப்படி துயரங்களில் இருந்து மீட்டு வாழ வைக்கிறாள் என்பதை கதைக்களமாக கொண்டிருக்கும் இந்த கயல் சீரியலில் கதாநாயகியாக உள்ள கயல் விபத்தில் சிக்குவது போன்ற ஒரு காட்சி எடுக்கப்படும் வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு சீரியல் எடுப்பதும் தற்போது அதிக சிரமங்களையும் கடின உழைப்பையும் செலவழிக்க வேண்டி உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.