
கடந்த வாரத்தில் தமிழக அரசு இந்து கோவில்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் இந்து கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் பிரதமர் மோடி பேசினார். இந்த விவகாரம் குறித்து தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேசியபோது, 'தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துக்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகிறது,. இந்து கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசு சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை தொடவில்லை' என பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'பிரதமர் மோடி கோவில் சொத்துக்களும் வருமானங்களும் முறைகளாக பயன்படுத்தப்படுவதாக முன் வைத்துள்ள குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்' எனக் கூறினார். இந்த விவகாரம் குறிப்பாக பிரதமர் திமுக அரசு கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டது தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளது என கூறிய விவகாரம் தமிழகத்தில் பெருமளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே தமிழக பாஜக சார்பில் அறநிலையத்துறை என்பது கலைக்கப்பட வேண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையை கலைத்து விடுவோம் கோவில்கள் சொத்தில் அறநிலையத்துறை அக்கறை காட்டவில்லை எனக் கூறி பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததும் பல கருத்துக்களை கூறி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் வேறு தி.மு.க அரசு கோவில்களை முறையீடாக பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளது எனக்கூறியது வேறு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது 'இந்து கோவில்களை தமிழ்நாடு அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியது நூற்றுக்கு 2 லட்சம் சதவீதம் உண்மை முதல்வர் ஸ்டாலின் சொல்வது பச்சை பொய்' என பேசினார். இப்படி ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் பேசியதும், பிரதமர் கூறியதும் பல சச்சரவுகளை ஏற்படுத்திய நிலையில் இடதுசாரிகள் குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பதிவில் குறிப்பிடும்பொழுது, 'இந்து கோவில்களை அரசு ஆக்கிரமிப்பதாக அவதூறாகவும், தவறாகவும் பிரதமர் பேசினார்.அது உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு என தமிழக முதல்வர் ஆதாரங்களுடன் மறுத்தார். இந்த சூழலில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான பொன்மாணிக்கவேல் என்பவர் மோடிக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அதுவும் இந்து கோவில்களை பாதுகாக்கப் போவதாகவும் மீசையை தடவிக் கொள்கிறார். பாவம் இன்னும் போலீஸ் ஆபீஸராக இருப்பதாகவே நினைத்து கொள்கிறார் இவர் சிலை தடுப்பு பிரிவு அதிகாரியாக வேலை செய்யப்போவது கோவில் சிலை நிறைய திருடு போயின ஒரு திருடனை கூட கைது செய்ய முடியாத இந்த வீராதி வீரர் தான் தற்பொழுது கோவில் பாதுகாப்பு குறித்து ஆர் எஸ் எஸ் குரலாக ஒலிக்கிறார்.
இந்த லட்சணத்தில் தமிழக முதல்வருக்கு சவால் விட்டு பேசியுள்ளார். பொன்மாணிக்கவேலை விசாரிக்கிற விதமாக விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் வெளிவரும் களவு போன பல சிலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன' என குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தது அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல குரல்கள் குறிப்பாக பாஜகவை சேராத பல குரல்கள் கோவில்கள் சொத்தை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது என பேசுவது இடதுசாரிகளுக்கு எரிச்சலை கிளப்பி உள்ளது எனவும் அதிலும் பொன்.மாணிக்கவேல் பேசியது இடதுசாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த காரணத்தினால் தான் வன்னியரசு இப்பொழுது வாய் திறந்து உள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. கோவில் சிலைகள் பற்றி, கோவில் சொத்துக்கள் பற்றி பொன்.மாணிக்கவேல் பேசினால் ஏன் விடுதலை சிறுத்தைகளுக்கு கோபம் வரவேண்டும் எனவும் வேறு விமர்சனத்தை சிலர் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கின்றனர்.