24 special

திமுகவை ஓட விடும் காலம் வந்துவிட்டது....விஜய் ரசிகர்கள் போட்ட ஸ்கெட்ச்!

actor vijay, mk stalin
actor vijay, mk stalin

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் "லியோ" இந்த படத்திற்கு மேலும் மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நெருக்கடி கொடுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்.,19ம் தேதி வெளியாகவுள்ள படம் "லியோ" இந்த படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நடைபெறும் பொழுதே, தளபதி விஜய் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்படுத்திருந்தார். இதன் மூலம் அரசியலுக்கு விஜய் வரப்போகிறார் என்று உறுதியானது. அதன் பின் பெருந்தலைவர்களுக்கு மாலை அணிவிக்கவும் விஜய் மாவட்ட தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ச்சியாக அனைத்து மாவட்டத்திலும் இரவு நேர பாடக சாலை உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் விரைவில் அரசியல் களத்தில் இறங்க போகிறார் என்பது 90 சதவீதம் உறுதியாகின. 


இந்நிலையில் விஜய் அரசியல் வருவது குறித்து பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலையிடம் கேட்டதற்கு வரவேற்கதக்கது என்று கருத்து தெரிவித்திருந்தார், அவரை தொடர்ந்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்பி அரசியலுக்கு வருவது அண்ணன் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தற்போது விஜயின் லியோ படம் வெளியாக இருப்பதால் தமிழ்நாட்டில் விநியோக உரிமையை திமுக-வின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கோரியிருந்தது. அதற்கு விஜய் மற்றும் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்ததால் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கான உரிமத்தை திமுக அரசு கொடுக்கவில்லை என்று தகவல் வந்தது. இதனால் போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக, 2013ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் தலைவா அந்த படத்தின் தலைப்பின் கீழ் "Time to Lead " என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனால் விஜய் அரசியில் களத்தில் குதிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்பட்டது. இதனால் அந்த படம் வெளியாக பல சிக்கல் சந்தித்தது.

மற்ற மாநிலங்களில் படம் வெளியாகி தலைவா படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை தொடவில்லை. அதன் பின் சர்க்கார் படமும் வெளியாவதில் சிக்கல் நிலவியது. தொடர்ச்சியாக மெர்சல் உள்ளிட்ட விஜய் படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிரவி வந்த நிலையில், தற்போது விஜய் அரசியலுக்கு வந்தால் திமுகவை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக லியோ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது, ஆடியோ வெளியிட்டு விழா தடை தொடர்ந்து, சென்னையில் உள்ள தியேட்டருக்கு படத்தை விநியோகிக்க உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கேட்டிருப்பதால் அதற்கும் படக்குழு நோ சொல்ல இப்போது படத்தின் மீது திமுக அரசு கைவைத்துள்ளது. படம் சொன்ன படி 19ம் தேதி வெளியாகுமா? அல்லது வேறு தேதியில் படம் ரிலீஸ் ஆகும் நிலைக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. படம் வெளியிட தடை விதித்தால் நிச்சயம் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் அதற்கான விளைவுகளை 2024ம் ஆண்டு திமுக நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக விஜயை சீண்டும் அரசியல் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று விஜய் ரசிகர்கள் சமூக தளத்தில் ஒன்று சேர்ந்து விவாதிக்க தொடங்கிவிட்டார்களாம். இதுவரை எதற்கும் பேசாமல் மௌனம் காத்து வருகின்ற விஜய், கூடிய விரைவில் தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து திமுகவிற்கு பதிலடி கொடுக்க யுகம் வகுத்து வருகிறாராம்.