அமைச்சர் பொன்முடி அமலாக்கதுறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அமலாக்கதுறை அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு பொன்முடியும் அவரது மகனும் கொடுத்த ரியாக்ஷன் தற்போது மெல்ல வெளிவர தொடங்கி இருக்கிறது.பொன்முடியின் சென்னை சைதாப்பேட்டை இல்லத்திலிருந்து நேற்று இரவு 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடியிடம் இன்று அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.
முதல் நாள் விசாரணை முடிவில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக கூறி சம்மனை கையில் கொடுத்து அனுப்பியது அமலாக்கதுறை இதையடுத்து விடியர் காலை பொன்முடி வெளியே வந்தார் அவரை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் சந்தித்தனர்.என்ன நடந்தது என்ற சில விவரங்களை கேட்டு அறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி தரப்பு வழக்கறிஞர் சரவணன், அமலாக்கத்துறை அலுவலகமா அல்லது சித்ரவதை கூடமா? என்றெல்லாம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இப்படி சரவணன் ஆவேசமாக ஒரு பக்கம் பேச மறுபக்கம் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வேறு வழியில் சென்றனர் பொன்முடி தரப்பினர் வீணாக செய்தியாளர்களை சந்தித்து அது பூதாகரமாகி வீண் வம்பில் செந்தில் பாலாஜி போன்று சிக்கிவிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறதாம் பொன்முடி தரப்பு.
அமலாக்க துறையினர் நேற்றைய தினம் ஆவணங்களில் உள்ள கையெழுத்து உங்களுடையது தானே கேட்க அதற்கு இல்லை என்ற ஒற்றை பதிலை மட்டும் பொன்முடி கூறியதாக கூறப்படுகிறது, மேலும் வீட்டில் இருந்த வெளிநாட்டு பணம் குறித்து கேள்வி கேட்க அது குறித்தும் வாயே திறக்கவில்லையாம், எனக்கு வயது 72 உடல் நிலை சரியில்லை நான் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை மட்டும் திரும்ப திரும்ப பொன்முடி தரப்பு கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நாளை பார்த்து கொள்ளலாம் என கைப்பற்ற ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு சொகுசு கார் போன்றவற்றை விசாரணைக்கு எடுத்து சென்ற அமலாக்கதுறையினர் இன்று மாலை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று வீண் முரண்டு பிடித்தால் சிறை செல்ல நேரிடும் என்பதை அறிந்த பொன்முடி நேரடியாக அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கதுறை அலுவலகம் சென்றதாக கூறப்படுகிறது.செந்தில் பாலாஜியை தொடர்ந்து தற்போது பொன்முடி அடுத்தது யார் எப்போது அமலாக்கதுறை உள்ளே நுழைவார்கள் என்ற பயம் தான் திமுக அமைச்சர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறதாம்.