24 special

பாரீன் காரு, பாரீன் கரன்சி - ராஜ வாழ்க்கை வாழ்ந்த அமைச்சர் பொன்முடி...!

Ponmudi,annamalai
Ponmudi,annamalai

சமீப காலமாக அமலாக்கத் துறையினரின் ரெய்டு தமிழகத்தில் அனல் பறக்கும் நிலையில் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து தற்காலிகமாக முடிந்துள்ளது. 


முதற்கட்ட சோதனையாக நேற்று காலை 7 மணி முதல் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து சோதனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் சென்னை விழுப்புரம் மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான  பொறியியல் கல்லூரிகள், அறக்கட்டளைகள் , மருத்துவமனைகள் மற்றும் அமைச்சர் பொன் முடியின் வீடு அவருடைய மகன் கௌதம சிகாமணியின் வீடு ஆகிய அனைத்து இடங்களும் சோதனையில் சிக்கியுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்த சமயத்தில் பாதுகாப்பு வழக்கத்தை விட இரண்டுமடங்கு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத் துறையினரின் தொடர் சோதனையால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையில் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோவிற்கு சாவி இல்லை என்று கூறியதால் அமலாக்கத் துறையினர் நவீன லாக்கரை உடைக்க பாண்டிச்சேரியில் இருந்து ஆள் இறக்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அந்த பீரோவில் பல முக்கியமான ஆவணங்கள் கிடைத்ததாகவும், அவருடைய வீட்டில் பல விலை உயர்ந்த பொருள்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணியின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று அங்கேயும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளது என தெரிகிறது. 

அமலாக்கத் துறையினரின் ஒரே சோதனையில் பொன்முடியின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில் 41.9 கோடி வைப்புத் தொகையை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு கார்களில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக அவர்களது கார்கள் அமலக்க துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 அமலாக்கத்துறை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் சோதனை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  திமுகவின் பைல்ஸ் ஒன் என்ற சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அது திமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவின் முதல் முக்கிய பனிரெண்டு அமைச்சர்களின் சொத்து பட்டியல் அதில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சொத்து பட்டியலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது உற்றார் உறவினர் சொத்துக்களோடு சேர்த்து முக்கிய அமைச்சர்களின் சொத்தான 1.34 லட்சம் கோடி என்ற தகவல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. 

மேலும் இந்த சொத்து பட்டியலில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொத்து 581.20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் மினி கூப்பர், போர்ஷே, பென்ஸ், ஆடி போன்ற ஆடம்பர கார்களும், அயல்நாட்டு கரன்சிகளும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பொன்முடியின் சொத்து பட்டியலும், அமலாக்கத் துறையினர் சோதனையின் போது கண்டுபிடித்ததும் ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொன்முடியின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் பல அதிர வைக்கும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் உள்ள சொத்துக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த நடவடிக்கையாக அமலாக்க துறையினர் பொன்முடியின் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.