24 special

திமுகவை I.N.D.I.A கூட்டணியில் இருந்து துரத்தும் வரை ஓயாது போல் இருக்கிறது சனாதன விவகாரம்...!

mk stalin, india kootani
mk stalin, india kootani

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் உதயநிதி பற்ற வைத்தது தான் என்று திமுகவிற்கே வினையாக மாறிவிட்டது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போன்றோர் சனாதனத்தை எதிர்க்கிறேன் என பேசியவுடன் உதயநிதி அதற்க்கு எல்லாம் ஒருபடி மேலே சென்று 'சனாதனத்தை எதிர்க்கக் கூடாது ஒழிக்க வேண்டும்' என பேசி அதற்கான வினையை அனுபவித்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த ஒரு கூட்டத்தில் உதயநிதி பேசியதை தொடர்ந்து அடுத்தடுத்த கூட்டங்களில் 'நான் அப்படித்தான் பேசுவேன் சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது, இதனைத்தான் பெரியார் அண்ணா போன்றோர் கூறினார்கள்' என உதயநிதி வீராப்புடன் கூறிக் கொண்டிருப்பதை கண்டு திமுகவில் உள்ள சீனியர்களே கோபமடைந்தது குறிப்பிடத்தக்கது அதன் விளைவாகத்தான் திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய திமுகவின் சீனியர் எம்பி டி.ஆர்.பாலு 'உதயநிதி யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார், அவரது தந்தை சொன்னால் மட்டும் தான் கேட்கிறார் அவரது தந்தையாவது அவருக்கு சொல்ல வேண்டும்' என்கின்ற ரீதியில் புத்திமதி சொல்லும் வகையில் பேசினார். 


இந்த விவகாரம் இப்படியே முடியாது இன்னும் தொடரும் என ஏற்கனவே பல அரசியல் விமர்சிகர்கள் கூறிவந்த நிலையில் டி.ஆர்.பாலு பேசிய அடுத்த இரண்டு நாளிலேயே உதயநிதி சனாதனத்தை பற்றி மீண்டும் ஒரு கூட்டத்தில் பேசினார். இப்படி தொடர்ச்சியாக சனாதனத்தை பற்றி பேசி வருவது திமுகவிற்கு நல்லதல்ல அதுவும் டெல்லியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கி வரும் நேரத்தில் இப்படி பேசுவது அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் கண்டிப்பாக காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆம் ஆத்மீ போன்ற கட்சிகளை பாதிக்கும், ஏன் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் உதயநிதி இந்த பேச்சை நிறுத்தாமல் இருப்பது அவருக்கு அதன் வினையை தற்பொழுது காட்ட ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.திருமாவளவனனுக்கு நோட்டீஸ் பறந்து உள்ள இந்த நேரத்தில் டெல்லியே அதிரும் அளவிற்கு உதயநிதியை கண்டித்து ஒரு பேரணி நடந்துள்ளது.

டெல்லியில் இந்து அமைப்பினர் தமிழ்நாடு இல்லத்தை நோக்கிப் பேரணி மேற்கொண்டனர், இந்து மதமார்கள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு இல்லத்தின் முன்பு இவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கையாக டெல்லி போலீஸார் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு தடுப்புகளை அமைத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.இப்படி இந்த பேரணி நடந்துள்ளது டெல்லி அரசியலில் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் டெல்லியில் இருக்கும் மேலிடம் குறிப்பாக I.N.D.I.A கூட்டணியின் மேலிடம் இதே நிலைமை நீடித்தால் நாளை மத்திய பிரதேசத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் நாம் ஸ்டாலின் உடன் இருக்கும் படத்தை வைத்தே பாஜக நம்மை வீழ்த்தும், இன்னும் சில தினங்களில் திமுக உதயநிதி பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும், இல்லையே திமுகவை தள்ளி வைப்பது நல்லது என முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக வேறு முடிவெடுத்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.