24 special

நெல்லையில் தொடரும் படுகொலை...என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?

mk stalin
mk stalin

திருநெல்வேலியில் உள்ள டவுன் கீழ ரத வீதியில் ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா என 18 வயது பெண் வேலை செய்து வந்தார். நேற்று கடைக்கு வேலைக்கு வந்த சந்தியா அருகில் உள்ள குடோனிற்கு சென்ற சந்தியா வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பவில்லை. சாந்தியவுடன் கடையில் பணிபுரியும் பெண்கள் குடோனிற்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சந்தியா கொலை செய்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த பெண்கள் உடனே அருகில் உள்ள நெல்லை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு கல்லுரி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சந்தியாவை கொலை செய்த நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி சந்தியாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சி அமைப்பினர் நெல்லையப்பர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசார் சந்தியாவுடன் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.


அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும், குற்றவாளியை விரைந்து புடிக்கவும் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணகுமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில் போலீசார் விசாரணையில் 18 வயதாகத இளைஞர் ஒருவர் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், சந்தியாவை தொடர்ந்து காதலிக்க துன்புறுத்தியதாகவும் இதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்தும், சந்தியா வீட்டில் இது பற்றி அறிந்த உறவினர்கள் அந்த இளஞரை கண்டித்துள்ளனர். மீண்டும் விடாமல் காதலிக்க வற்புத்தியதால் சந்தியா கண்டுகொள்ளாமல் தனது பணியில் கவனம் செலுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளஞர் சந்தியா குடோனிற்கு செல்லும்பொழுது பின் தொடர்ந்து கத்தியால் மிரட்டி என்னை காதலிக்கமாட்டாயா என கூறி சந்தியாவின் கழுத்தில் வெட்டியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அங்கு வருவதற்குள் தப்பி சென்றுவிட்டார்.இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் ஒழுங்குமுறை இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னதாக நெல்லை நாங்குநேரியில் பள்ளி மாணவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவனை அரிவாளால் வெட்டியது, தொடர்ந்து தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவங்கள் போன்று இந்த ஆட்சியில் ஆணவப்படுகொலை, கள்ளக்குறிச்சி சம்பவம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அளித்து சென்று பற்களை பிடுங்கும் சம்பவம் போன்று காவலர்களும் திமுக ஆட்சியில் அராஜகம், போன்று பல குற்ற செயல்கள் முன்னேறியுள்ளது .திமுக அரசு இதுவரை எதற்கும் செவி சாய்க்காமல் இருப்பதாக கருத்து எழுந்துள்ளது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும்; காவல் துறையினரை அலட்சியப்படுத்தி திமுகவினரே அராஜகத்தில் ஈடுபடுவார்கள்’ என்பது அதிமுக எப்போதும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. கடந்த சில ஆண்டுகளாக பாஜகவும் அதை அழுத்திச் சொல்கிறது. அதனை விலகி கூறும் வகையில் தற்போது தமிழ்நாட்டில்  கொலை சம்பவம் அதிகரித்துள்ளது