பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார், அப்போது மூன்று முக்கிய கருத்தை அண்ணாமலை தேசிய தலைமையிடம் தெரிவித்து இருக்கிறார். அதிமுக கூட்டணியில் நாம் போட்டியிட்டு இருந்து தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சில தொகுதிகளை வென்று இருந்தால் அது அதிமுக மூலம் கிடைத்த வெற்றி என்று பொதுவெளியில் கூறுவார்கள் அதுவே அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவினால் பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதால் தோல்வியை மக்கள் கொடுத்து விட்டார்கள் சிறுபான்மை வாக்கு வங்கி பாஜக இருப்பதால் கூட்டணிக்கு கிடைக்கவில்லை என நம் மீது தான் பழி போடுவார் எடப்பாடி பழனிசாமி எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்பது பெரும் பின்னடவை அடுத்த 15 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் பாஜகவிற்கு கிடைக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் மக்களவையில் 10 தொகுதிகளில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளும் எனவும் பாஜக வாக்கு வங்கி 10-15% வரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் எனவும் அதிமுகவிற்கு அதிக பட்சமாக 20-22% வாக்குகளே கிடைக்கும் எனவும் இதே நிலையை பாஜக அடைந்தால் 2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக எதிர்கட்சியாக அமர்ந்தது போன்று சாதிக்க முடியும் எனவும் தமிழகத்தில் அதனை தேமுதிக செயல்படுத்தி காட்டி இருப்பதையும் அண்ணாமலை தேசிய தலைமையிடம் விளக்கி இருக்கிறார்.மூன்றாவதாக அண்ணாமலை சொன்ன விஷயம் தான் அரசியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கைக்கு உரிய நபர் இல்லை அதிமுக சின்னம் மற்றும் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பதற்காகதான் பாஜக கூட்டணியில் தொடர்ந்தார்.அனைத்தும் கிடைத்த பின்பு தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார், ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் பல முறை சொல்லியும் கேட்காமல் வேட்பாளரை நிறுத்தினார் இறுதியில் என்ன ஆச்சு? அதிமுக பலம் என்பது தற்போது கூட்டணி தயவை நம்மி தான் இருக்கிறதே தவிர நேரடியாக இல்லை என்பதற்கு நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளே சாட்சி எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறாராம்.
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்த நிலையில் மறைமுக லாபம் அந்த கட்சிக்கு தான் இருந்ததே தவிர பாஜகவிற்கு நஷ்டம்தான் இருந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.இப்படி அண்ணாமலை டெல்லியில் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கள் உடனடியாக டெல்லி தலைமை கவனத்திற்கு சென்று இருக்கிறது.நேற்று அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்.வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்என எடப்பாடி பழனிசாமி பேசினார்.இவையும் பாஜக டெல்லி தலைமை கவனத்திற்கு சென்று இருக்கிறது பாஜக கூட்டணியில் இல்லாத நவீன் பட்னயக், ஆந்திரா முதல்வர் ஜெகன் போன்றோர் கூட இப்படி பாஜகவை விமர்சனம் செய்யவில்லை ஆனால் இதுநாள் வரை கட்சியை காப்பாற்ற பாஜக தயவை நாடிய எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பாஜகவை வெளியேற்றியது தொண்டர்கள் எடுத்த முடிவு என பேசியது, எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட் சரி என உணர்த்தி இருக்கிறதாம்.இந்நிலையில் பாஜக தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும், உடனடியாக ஓபிஎஸ் TTV தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைக்கவும் டெல்லி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாம்.இனிதான் தமிழகத்தில் பாஜகவின் முழுமையான ஆட்டம் இருக்கும் என அடித்து கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்