பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம், மதுபான விற்பனைக்கு எதிராக போராட்டம், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவம், திமுகவின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரி துறை மற்றும் அமலாக்க துறையினர் ரெய்டு மற்றும் கடந்த இரண்டு நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படித்தொடர் போராட்டங்களை தங்கள் அரசுக்கு எதிராக நடைபெற்று வருவதை சந்தித்து வருகின்ற திமுகவிற்கு மற்றுமொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது வருகின்ற ஜூன் மாத இறுதியில் கிட்டத்தட்ட 700 தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற உள்ளதாக சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழக வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்களை இதுவரையிலும் போக்குவரத்து கழகம் நியமிக்கவில்லை என்ற தகவல் போக்குவரத்து கழகங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பேருந்துகளில் ஓட்டுநர் நடத்துனர் பணிகளுக்காக புதிய பணியிடங்களை நிரப்பாமல், புதிய ஆட்களை தேர்வு செய்யாமல் இருந்து வருவதாலும், போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வூதியம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாலும் அதனாலேயே புதிய ஓட்டுநர்களை நியமிக்காமலும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலும் தமிழக அரசு இதில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்குப் பிறகு அப்போதைய நிலைமையை சமாளிக்க போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக மாற்றி உத்தரவிட்டது இதனால் கடந்த இரண்டு ஆண்டுகள் சமாளிக்க முடிந்ததாகவும் போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது ஜூன் மாதம் இறுதியை எட்டுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளது, அன்று ஒரே சமயத்தில் 700 ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்து கழகத்தில் சில பேருந்துகளை இயக்க ஊழியர்கள் இல்லாமல் போய்விடும் என்ற நிலை உள்ளதாகவும் அதனை சமாளிக்க ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை மறுபடியும் நியமிப்பதற்கான முயற்சிகளை திமுக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடிகள் ஈடுபட்ட விவகாரம் அமலாக்கத்துறை வரை சென்று அதனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புதிய நியமனங்களுக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஊழியர்களை மறுபடியும் வேலையில் அமர்த்துவது பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்று அ ம மு க கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் திமுகவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸும், போக்குவரத்து கழகங்களில் கடந்த சில ஆண்டுகளாக புதிய ஓட்டுநர்கள் நடத்தினார்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது இந்த நிலையில் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்து கழகத்தையே நம்பி இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மிகவும் வலிமையான பொது போக்குவரத்து கழகங்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானதாக உள்ளது ஆனால் தற்போது சில வருடங்களாகவே அதில் எந்த ஒரு முன்னேற்றமும் புதிய சேவைகளையும், முறையாக பராமரிக்காமலும் இருப்பதால் பொது போக்குவரத்து கழகங்களின் செயல் திறன் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் நியமிப்பதில் தான் பிரச்சனை என்றால் செயல்படும் பேருந்துகளும் பிரச்சனையாக தான் உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டிய பேருந்துகள் 15 ஆண்டுகள் ஆகியும் மாற்றப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்து வருகிறது. திமுக அரசு தனது நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல், தமிழக மக்கள் அதிலும் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் எந்த ஒரு செயலையும் செய்யாமல் ஏற்கனவே இருக்கும் சேவைகளிலும் குறைகளை ஏற்படுத்தி வருகிறது என தற்போது குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
.