காங்கிரஸ் கட்சி என்றாலே அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் என்றாலே அடிதடி சண்டைக்கு பேர் போனவர்களாக தான் இருப்பார்கள். கட்சிக்குள்ளேயே 10, 15 குழுக்கள் எப்பொழுதுமே இருந்து கொண்டு கட்சியின் பெயரை அவர்களே கெடுத்துக்கொள்வார்கள்!
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி பதவியில் உள்ளார், அவரது பதவிக்கால முடிவடையுள்ளதால் புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை வரும் 2024 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தால் காங்கிரஸ் கட்சி படு வீக்காக மாறிவிடும் அதுமட்டுமில்லால் இனி காங்கிரஸ் கட்சி எழவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்!
இதனால் புதுச்சேரி, டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சில மாறுதல்களை ஏற்படுத்தியது. அதேபோன்று தமிழக காங்கிரஸிலும் தலைவர் பதவி காலம் முடிவடைய உள்ளதால் புதிய தலைவரை நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது காங்கிரஸ் தலைமை. ஆனால் அது எப்படி சுமூகமாக நடக்கும் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றாலே கட்சிக்குள்ளே பல பிளவுகள் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் வந்து சண்டையில் தான் போய் முடியும். இந்த நிலையில் சுமூகமாக தலைவரை தேர்ந்தெடுப்பது எப்படி அது நடக்குமா! அப்படி நடந்தால் நான் மொட்டை எடுத்துக் கொள்கிறேன் என்று சில அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் கூறியபடியே தற்போது தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதில் சில சிக்கல்களும், பல போட்டிகளும் ஏற்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கே எஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர் பொறுப்பேற்றுதற்குப் பிறகு மக்களவை, சட்டமன்ற தேர்தல் போன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது இதனால் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவரை மாற்றும் காங்கிரஸ் கே எஸ் அழகிரி மாற்றவதற்கு யோசிக்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள காரணத்தினால் நான்கு மாநிலங்களின் தலைவர்களை மாற்ற அகில இந்திய அளவில் நிர்வாகிகள் சிலரை மாற்றவும் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோஷ்டி அரசியலுக்கு பெயர் பெற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர்களும் தற்போது இருக்கும் இளம் தலைவர்களும் கே எஸ் அழகிரியை மாற்றி விட்டு தங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டெல்லிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய மகனான சிவகங்கை எம் பி கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸின் தலைவராக மாற்ற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி இன்று காலையில் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து வந்துள்ளார். அதோடு கார்த்திக் சிதம்பரம் தன்னை தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். இவரைப் போன்றே கரூர் எம்பி ஜோதிமணி, மயூரா ஜெயக்குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் என்ன பலரும் தங்களை தமிழக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று போட்டிபோட்டுக்கொண்டு டெல்லியை முட்டி வருகின்றனர். இவர்களெல்லாம்போதாது என்று, இவர்கள் யாரும் தலைவராக வந்துவிடக்கூடாது மறுபடியும் நாமே தலைவராக வேண்டும் என்று கே எஸ் அழகிரி உறுதியாக உள்ளார்.
அடுத்த சண்டைக்கு தற்போது தமிழக காங்கிரஸ் தயாராகிவிட்டது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தலைவர் பதவிக்காக நடைபெறும் போட்டியால் தமிழக காங்கிரஸ் கட்சியினர் எந்த பக்கம் நிற்பது என தெரியாத நிலையில் மண்டையை பித்துக்கொண்டிருக்கின்றனர். தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் வளர்கிறதே நம்மால் அந்தளவிற்கு வளரமுடியவில்லையே என தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் வெளிப்படையாகவே புலம்ப துவங்கிவிட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளது.