24 special

தமிழகத்தில் "நடைபெறும்" போராட்டம் பகிர் தகவலை வெளியிட்ட எழுத்தாளர்!

Bus stand
Bus stand

பதிவு -ஸ்டான்லி ராஜன்,  DATE - 28/03/2022 / அனுப்பியவர் -பிரியா சங்கர்  இன்றும் நாளையும் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கங்களெல்லாம் வேலை நிறுத்தம் செய்கின்றன இதனால் ஆங்காங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகின்றது.இதை நாம் இருவருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம், டிரம்பர் தொடங்கிவைத்த சீன ஜல்லிகட்டை பிடனும் தொடர்கின்றார், சீனாவினை அடக்கியே தீருவது என கடும் முயற்சியில் இருக்கின்றன மேலைநாடுகள் இதனால் சீனாவில் இயங்கும் பெருவாரி வெளிநாட்டு நிறுவணங்கள் நடையினை கட்டுகின்றன‌.


வெளிநாட்டு நிறுவணங்கள் சீனாவில் தொழில்செய்ய காரணம் சீன நூடுல்ஸ் சுவையானது என்றோ இல்லை பன்றிகறி சூப் பலமானது என்பதற்காகவோ அல்ல, சீனாவின் பெரும் மக்கள் தொகையால் தொழிலாளர் கிடைப்பது சுலபம் சம்பளம் மேற்குலகை விட மிக குறைவு இதனால் மேல்நாட்டு கம்பெனிகளுக்கு பெரும் லாபம்.சீனாவினை விட்டு வெளியேறும்பொழுது அவர்களின் இலக்கு சீனாவினை போல பெரும் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசம் அன்றி வேறல்ல‌, இந்தியாவின் அமைப்பும் மக்கள் தொகையும் இதர வளங்களும் முதலீட்டாளர்களுக்கு பிடித்தமானவை, இந்த வாய்ப்பினை மோடி அரசு சரியாக பயன்படுத்தியது

ஆனால் இந்தியாவில் இல்லா சில சவுகரியம் சீனாவில் உண்டு, சீனாவில் இல்லா பல அசவுகரியங்கள் இந்தியாவில் உண்டு, சீனா கம்யூனிஸ்ட் நாடு, அங்கு ஆட்சி என்பது நிரந்தரம் அடிக்கடி அல்ல மொத்தமாகவே தேர்தல் இல்லை, ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி கொள்கை மாறும் சிக்கல் இல்லை, எதிர்கட்சி இல்லை போராட்டமில்லை எல்லாம் அமைதி.குறிப்பாக தொழிலாளர் நல கம்யூனிஸ்ட் நாடு என்றாலும் தொழிற்சங்கமோ  தொழிலாளர் போராட்டமோ அங்கு நினைத்து கூட பார்க்கமுடியாது, ஆனால் இந்தியா அப்படி அல்ல, ஏகபட்ட கட்சிகள் அடிக்கடி தேர்தல், எதற்கெடுத்தாலும் கொடிபிடிக்கும் தொழிற்சங்கம் என சிக்கல் அதிகம்

ஜனநாயகநாடான இந்தியாவில் தேர்தலை மாற்றமுடியாது ஆனால் தொழிலாளர் தொடர்பான சில சட்டங்களை மாற்றலாம், அதனால் இந்திய அரசு அந்நிய முதலீட்டுக்காக சில சட்டங்களை மாற்றியது சிலவற்றை கடுமையாக்கியது, இது நாட்டுக்கு தொழில்பெருகும் அவசியம் அன்றி வேறல்ல‌.இதைத்தான் தொழிற்சங்கங்கள் இப்பொழுது "அநீதி, அநியாயம், தொழிலாளர் விரோதம்" என கொடிபிடித்து எதிர்க்கின்றன‌ .

இவர்களின் போராட்டமும் இதர முடக்கங்களும் நாட்டுக்கு என்ன பலனை கொண்டுவரும் என்றால் பெரும் பின்னடைவைதான் கொண்டுவரும், அதாவது அந்நிய முதலீட்டு நிறுவணம் குழப்பமான இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் , மறுபடி அவர்கள் சீனா போன்ற நாடுகளை தேடவேண்டி வரும்.ஏற்கனவே ஸ்டெர்லைட மூடபட்டு ஆசிய தாமிர கம்பி  சந்தையினை சீனா அள்ளியது இப்படித்தான், இதெல்லாம் இங்கிருக்கும் தொழிலாளர் நினைத்துபார்க்க வேண்டிய விஷயம்,

நாம் இப்படி எல்லாம் போராடினால் இதெல்லாம் இன்னொரு நாட்டுக்கல்லவா செல்லும், அதுவும் தொழிலாளர் நலனையே மதிக்கா சீனா போன்ற நாட்டுகல்லவா செல்லும்?நாடு தொழிலில் வளர்ந்தால்தானே எல்லோருக்கும் நன்மை, நமக்கும் சலுகையும் நிதியும் கிடைக்கும் என அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் அவர்கள் சிந்திக்காவிட்டால், அந்நிய முதலீட்டுக்காக துபாய் சென்றிருக்கும் தமிழக அரசு இதனை எடுத்து சொல்ல வேண்டும்.

ஆனால் ஆச்சரியமாக தமிழக அரசு இந்த போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை, அதாவது அந்நிய முதலீட்டுக்களை தடுக்கும் இந்த போராட்டங்களை கண்டுகொள்ளா தமிழக அரசு துபாயில் அந்நிய முதலீடு பெற்றதாக தனக்கு தானே வாழ்த்துகின்றது, போராட்டமும் இதர அச்சுறுத்தலும் உள்ள மாகாணத்தில் யார் முதலீடு செய்யவருவார் என கேட்டால் அவன் சங்கி. இந்த தேசத்துக்கு நல்ல விஷயம் நடக்கவே கூடாது, உலக அரங்கில் இந்தியாவின் ஸ்திரதன்மை அதன் அமைதியினை கேள்விகுறியாக்கி நல்ல வாய்ப்புகளை எல்லாம் விரட்டி அடிக்க வேண்டும் எனும் தேசவிரோத காரியத்தை தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன‌.நாடு நல்ல வளர்ச்சி அடைய முதலில் செய்யவேண்டியது இந்த தொழிற்சங்கம் எனும் கால் விலங்கை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது. 

இந்த கட்டுரை/பதிவு தனி நபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததை TNNEWS24 குழு இணையதளம் மூலம் பொது பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவுகிறது, இந்த கட்டுரை TNNEWS24 குழுவால் உருவாக்கப்பட்டதல்ல . உங்களது சிறப்பு கட்டுரைகள் /பதிவுகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.. EMAIL - [email protected]   *T@C APPLY