திமுகவின் அதிகார பூர்வ பத்திரிகையான இன்றைய முரசொலியின் 8 வது பக்கத்தில் வெளியான செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் செய்தியை முரசொலி வெளியிட்டு இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முதல்வர் ஸ்டாலினின் பயணத்தால் துபாயே திணறியதாகவும் தலைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
சரி அது அரசியல் எந்த கட்சியும் அவ்வாறு செய்தி போடுவது சகஜம் என்று கடந்து செல்லலாம், ஆனால் அந்த செய்தியில் முதல்வர் ஸ்டாலினின் துபாய் நிகழ்ச்சியை A23.COM என்ற இணையதள தொலைக்காட்சி சிறப்பு ஒளிபரப்பு செய்ததாக முரசொலியில் கட்டுரையில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். இது பலத்த கிண்டலுக்கு ஒருபுறம் உள்ளனாலும் சாதாரண பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் A23.COM என்பது ஒரு ரம்மி விளையாடும் சூதாட்ட இணையதளம், இதை கூட தெரியாமல், A23 இணையதள பெயரை குறிப்பிட்டு முதல்வர் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததாக ஒரு ஆளும் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகை செய்தி வெளியிடுவது எவ்வளவு பெரிய குற்றம் எனவும் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
வழக்கமாக முரசொலியில் வரும் செய்திகளை வெளியிடும் தமிழக ஊடகங்கள் ஏன் "முரசொலி ", சூதாட்ட இணையதள பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதை ஒரு வரி செய்தியாக கூட வெளியிட வில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில் முதல்வரின் துபாய் வெளிநாட்டு பயணம் தனி விமானத்தில் தொடங்கி ரம்மி விளையாட்டு வரை சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
பாஜகவினரோ மற்றொரு குற்றசாட்டை வைத்து வருகின்றனர், தனியார் ரம்மி இணைய தளத்திடம் ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொண்டு இலவச விளம்பரத்தை முரசொலி கொடுக்கிறதா எனவும் அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என வாய்ஸ் கொடுத்த திமுக இப்போது ஆன்லைன் ரம்மி நிறுவனத்தை இணையதள ஊடகம் என செய்தி வெளியிட்டு இருப்பது பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
SOURCE - https://www.murasoli.in/epaper/file_view.php?paper=VFZSak1VOVJQVDA9