பாஜக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சி, பல்வேறு மூத்த நிர்வாகிகள், முதலமைச்சர்கள் என பலரை பெற்றுள்ள பாஜக உட்கட்சி மோதலை கையாளும் விதம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.
இந்த சூழலில் உட்கட்சி பிரச்சனைகளை பாஜக கையாள இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு ஒன்று மோடி மீதான தலைமையில் யாருக்கும் மாற்று கருத்து இல்லாமல் இருப்பது மற்றொன்று துல்லியமாக தகவலை கொடுக்கும் உளவுத்துறை தலைவர்கள்.
ஆட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கு மிக பெரிய உதவியை செய்வது உளவுத்துறை கொடுக்கும் தகவல்கள் தான் அந்த வகையில் அண்ணாமலை குறித்து பல்வேறு புகார்களை தமிழகத்தை சேர்ந்த சிலர் டெல்லியில் கொடுத்து வரும் வேலையிலும் அண்ணாமலைக்கு மோடி அமிட்ஷா ஆதரவு கரம் நீட்ட அண்ணாமலை குறித்து உளவுத்துறை கொடுத்த கிளீன் ரிப்போர்ட் தான் காரணமாக கூறப்படுகிறது.
அண்ணாமலையை மீது தமிழகத்தை தாண்டி கர்நாடக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறார்கள் அவர்கள் வாக்குகளை பெற அண்ணாமலையை கர்நாடக தேர்தலில் பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சருக்கு தகவல் போக உடனடியாக கர்நாடக மாநில சட்டம் மன்ற தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலையை அமிட்ஷா நேரடியாக டிக் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் அண்ணாமலை குறித்து கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அண்ணாமலை குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகிறது.
அதில் அண்ணாமலை கர்நாடகவை ஒரு கலக்கு கலக்கியவர் இங்கயே கலக்கியவர் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் விட்டு வைப்பாரா நிச்சயம் டபுள் டபுளாக செய்வார் தமிழ்நாட்டிலும் அண்ணாமலை வரணும் பாஜக ஆட்சியை பிடிக்கணும் என பேசுகிறார் ஆட்டோ டிரைவர்.
இந்த எண்ண ஓட்டங்களை கணித்து தான் அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை கர்நாடக மாநிலத்தில் பாஜக சட்டசபை தேர்தல் இணை பொறுப்பாளராக அறிவித்து இருக்கிறது. இப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் அண்ணாமலை குறித்து பேசும் வீடியோ டெல்லி வரை சென்று இருக்கிறதாம்.
கர்நாடக தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தை தீர்மானிக்க முழு அளவில் அண்ணாமலைக்கு டெல்லி க்ரீன் சிக்னல் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது,எது எப்படியோ தமிழக அரசியல் களத்தில் இப்போதாவது பாஜக தேசிய தலைமை ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க இருப்பதை எண்ணி அடிமட்ட பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி,அமிட்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு இருக்கும் சந்திர பாபு நாயுடு மற்றும் எடப்பாடி பழனிசாமி என்ன காரணம் என அடுத்த வீடியோவில் முழுமையான டெல்லி தகவல்களுடன் பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.