24 special

கடும் கவலையில் கனிமொழி.. அடுத்தது யார்?

A rasa, kanimozhi
A rasa, kanimozhi

ராகுல் காந்திக்கு நடைபெற்ற சம்பவம் நாட்டில் பல கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது, தங்கள் பதவி பறி போகுமோ என பல தலைகள் தங்கள் கட்சி தலைவர்களுடனும் மூத்த வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.


அந்த வகையில் கனிமொழி தலைக்கு மேல் நிற்கும் 2 ஜி வழக்கில் என்ன தீர்ப்பு வர போகிறது என கனிமொழி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ள சூழலில் கனிமொழி புலம்பி தவித்த விவகாரம் வெளிவந்து இருக்கிறது.

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் என கனவிலும் காங்கிரஸ் கட்சியினர் நினைக்கவில்லையாம், சூரத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அரசியல் ஆக்கி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் வகுத்து கொண்டு இருக்கும் போதே மறு பக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இதை யாருமே எதிர் பார்க்கவில்லையாம் எப்படியும் மத்திய அரசு ராகுல் காந்தியை ஒரு மாதத்திற்கு தகுதி நீக்கம் செய்யாது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கீழ் நீதிமன்ற தீர்பிற்கு தடை வாங்கலாம் அத்துடன் களத்தில் ராகுல் காந்தியை மோடி பழி வாங்குகிறார் என பிரச்சாரம் செய்யவும் காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது.

ஆனால் உடனடியாக ராகுல் எம் பி பதவியை சட்டத்திற்கு உட்பட்டு ரத்து செய்யவும் அதனால் என்ன பின் விளைவுகள் வந்தாலும் சமாளிக்க தயார் எனவும் பாஜக நினைத்து தான் அதிரடி முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தான் நாடாளுமன்றத்தில் கூடியுள்ள அனைத்து எதிர் கட்சிகள் எம் பி களும்  தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருவதாம்,  ராகுலை எம்பி பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என நினைத்தால் 24 மணி நேரத்தில் நீக்கம் செய்ததோடு நில்லாமல் மக்களவை உறுப்பினருக்கானா பங்களாவையும் காலி செய்ய வைத்து விட்டார்கள்.

இப்படி எல்லாம் நடந்தால் நாளை மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் எதிர்க்கட்சிகளே இருக்காதே என கனிமொழி உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற வளாகத்தில் புலம்பி தவித்து வருகிறார்களாம்.

இது வெளிப்படையாக என்றால் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பல அரசியல் வாதிகள் தங்கள் தரப்பு வழக்கறிஞரை நேரில் அழைத்து வழக்கு நடைமுறை எல்லாம் எப்படி போகிறது, எதுவும் சிக்கல் இல்லையே பார்த்து கொள்ளுங்கள் என விசாரணை செய்து கொள்கிறார்களாம்.

ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டது இந்திய அளவில் எதிரொலிக்கும் என காத்திருந்த எதிர் கட்சிகளுக்கு ராகுலின் சாவர்கர் பற்றிய பேச்சு உலை வைத்து விட்டதாம் அனுதாப அலை கூட  மக்களிடம் ஏற்பட வில்லையாம்.

இந்த சூழலில் விரைவில் கனிமொழி மீதான 2ஜி ஊழல் வழக்குவிரைவில் விசாரணைக்கு வர இருப்பதால் அதில் வழக்கப்படும் தீர்ப்பு எது போன்ற தாக்கத்தை தமிழக அரசியல் களத்திலும் உண்டாக்கும் என பெரும் எதிர் பார்ப்பு எழுந்து இருக்கிறது.