24 special

தொண்டர்களே வைத்த மிகப்பெரிய ஆப்பு..!கவலையில் செந்தில் பாலாஜி

Senthil balaji, annamalai
Senthil balaji, annamalai

தற்போது நடக்கும் அரசியல் ஆட்சி முறைகளில் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேருகிறதோ இல்லையோ ஆளுங்கட்சியாக உள்ள முக்கிய பிரமுகர்களின் ஊழல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று தமிழகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனைகளும் தற்போது அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது வருமானவரித்துறைகளின் வலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாட்டியுள்ளார். திடீரென அதிகாலையில் வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேரம் ஆக ஆக இடங்களின் எண்னிக்கை அதிகமாக வெளிவந்ததும் 200 என தெரியவந்தது. இந்த சோதனை புகார்கள் அதிகமாக எழும் பொழுது மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனையாகவே வருமான வரித்துறையினரின் தரப்பில் கூறப்படுகிறது. 


அதாவது சமீபகாலமாக குற்றச்சாட்டுகளுக்கு பெயர் போனவராக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் செயல்பட்டு வருகிறார். கள்ளச்சாராயம் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, டாஸ்மாக்கில் ஊழல், கடந்த ஆட்சி பதவியில் செய்த பண மோசடி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒவ்வொரு தரப்பிடமிருந்து எழுத புகார்கள், போராட்டங்கள் இவைகளே இந்த அதிரடி ரெய்டுக்கு காரணங்கள் என்று பொதுவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலைகள் திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை  ரெய்டு நடத்துவதை எதிர்த்ததும், தங்களது பணிகளை செய்யவிடாமல் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது மேலும் அவர்களை தாக்க முற்பட்டது போன்ற பல வழக்குகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்ட மற்ற திமுகவின் ஆதரவாளர்கள் மீது விழும் என தற்போது தெரிகிறது. 

இந்த நிலையில் திமுகவினர் தற்போது  என்ன சொல்லி முட்டுக் கொடுப்பது என தெரியாத வகையில் பேசி வருகின்றனர். குறிப்பாக திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி அதிரடி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், "திறந்த வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் யார் என்று கேட்கத்தான் செய்வார்கள், இன்னார் என்றால் ID கார்டு கொடு என்றுதான் சொல்வார்கள், சோதனைக்கு நீங்க ஏன் பை கொண்டு போகிறீர்கள், அதற்குள் என்ன இருக்கு என சம்பந்தப்பட்டவர்கள் கேட்க தான் செய்வார்கள், இது ஜனநாயக நாடு, சங்கிகளே வாயை மூடு" இவ்வாறு திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

இவர் இப்படி பதிவு போட திமுகவின் மூத்த அமைச்சர் கே என் நேரு மற்றும் கனிமொழியிடம் இது பற்றி கேட்கும் பொழுது, கே என் நேரு என்னிடம் இதைப் பற்றி கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். கனிமொழி அவர்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து சென்றுள்ளார். இப்படி என்ன சொல்வதென்று தெரியாமல் மூத்த திமுகவினர் ஒதுங்கி போகும் வேளையில் ஆர்வக்கோளாறு திமுகவினர் முட்டு கொடுக்கிறேன் என்ற பெயரில் செந்தில் பாலாஜிக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தருகின்றேன் என்ற பெயரில் அரசாங்கத்தையும் அரசு அதிகாரிகளையும் எதிர்த்து பேசுவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே அது வினையாக அமையும் என தெரிகிறது. செந்தில் பாலாஜி சற்று அமைதியாக இருங்களேன்ப்பா என்று தன் புலம்பி வருவதாகவும் இதனை தனது நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முன்னதாக தனது பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் திமுகவின் ஆதரவாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு ஆதரவாக ஒரு கும்பல் ஐ டி அதிகாரிகளை தாக்கியுள்ளனர். இது போன்ற தவறான செயல்களை உங்கள் கட்சி ஆட்கள் மேற்கொண்டு வருகிறார்கள், நீங்கள் நினைக்கும் படி ஆட்சி செய்வதற்கு இது ஒன்றும் 60 கள் இல்லை. அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

எப்படியும் வருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பகைத்துக்கொள்வது கண்டிப்பாக அவருக்கு விளைவை ஏற்படுத்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.