24 special

சிக்கியுள்ள முக்கிய ஆதாரங்கள்..!ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் இன்று பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பது உண்மையில் செந்தில் பாலாஜியை வருமான வரித்துறை நெருங்கி விட்டதை உறுதி செய்துள்ளது.


தமிழக காவல்துறையினர் முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கரூரில் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள்  புகார் தெரிவிக்க, உடனடியாக வருமான வரித்துறை உயர் அதிகாரி நேரடியாக தமிழக டிஜிபியை தொடர்புகொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இனி இது போன்ற சோதனைகளில் CRPF வீரர்களை பயன்படுத்துவதை தவிர வழியில்லை எனவும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து கரூர் விரைந்த CRPF வீரர்கள் களத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதையடுத்து தீவிரமாக களத்தில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் காலையில் எந்தெந்த வீட்டுக்களில் எல்லாம் தடுத்து நிறுத்த பட்டு இருந்ததோ அந்த இடங்களை ஓபன் செய்து சோதனை நடத்தினர்.

பல இடங்களுக்கு சீல் வைத்தனர், இதில் கரூர் துணை மேயர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது உண்மையில் செந்தில் பாலாஜிக்கு விழுந்த பெரிய அடியாக பார்க்க படுகிறது.  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு என்ன காரியம் செய்தீர்கள், கட்சியினரை குறிப்பாக மேயர் போன்றோரை அருகில் வைத்து கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பை பதிவு செய்யலாமா? இதெல்லாம் முறையா உடனடியாக கட்சியினரை வெளியேற்றுங்கள் என கூறி இருக்கிறார்கள்.

இந்த சூழலில் தமிழக டிஜிபி தரப்பில் இருந்து மாவட்ட SP க்கு முறையான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என உத்தரவு செல்லவே....காலையில் உதார் விட்ட பல திமுக தலைகள் மருத்துவமனையில் நெஞ்சு வழி என படுத்துவிட்டார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியவர்கள் கூட பல்வேறு வழக்குகளில் இருந்து வெளிவந்து இருக்கிறார்கள் ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்களோ அல்லது அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேற்றியவர்கள் தப்பித்ததாக வரலாறு இல்லை.

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், சோதனைக்கு பிறகு வெளியாகும் அறிவிப்பு செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல ஆளும் திமுகவிற்கும் பின்னடைவை கொடுப்பதாக அமையும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.