24 special

வாயை விட்டு சிக்கிய கனிமொழி... மொத்தமாக மாறிய களம்.. இனி வாய்ப்பே இல்லை அடித்து சொன்ன மக்கள்

MKSTALIN,KANIMOZHI
MKSTALIN,KANIMOZHI

நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு தேர்தல் நெருங்கி வருவதால் அடுத்து மொழி, இனம் தமிழ் என பேச ஆரம்பித்துவிட்டது.. தற்போது சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பேச ஆரம்பித்து விட்டது.   எம்பி திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் வஉசி குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு திமுக என்ன செய்தது என கேட்டு அவரது பேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு வஉசி பெயரை வைத்திருக்கிறார்? எத்தனை நூலகங்களுக்கு வஉசி பெயர் சூட்டப்பட்டுள்ளது?நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்த போதும் வஉசிக்கு சிலை வைக்கவில்லை.


ஆனால் முரசொலி மாறனுக்கு சிலை வைத்தார்கள். முரசொலி மாறன் தியாகம் செய்து சிறை சென்று சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா? என்ற கேள்விகள் எழுந்தது. 

மத்திய அரசுவைக்கிற திட்டங்கள் எல்லாவற்றின் பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே இருக்கிறது. ஏதாவது ஒரு மசோதாவின் திட்டம்பெயர் கூட தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது மராத்தி பொன்ற வேறு பிராந்திய மொழிகளில் வைக்கப்படுவதில்லை ஏன்? என தற்போது கனிமொழி கேட்டு சிக்கிக்கொண்டுள்ளார். ஏனென்றால் 15 வருடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அமைச்சர் பதவிகளை வாங்கிய திமுக எத்தனை திட்டங்களுக்கு தமிழ் பெயர் வைத்தது தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை,ஏன்  என்ற கேள்விகள் எழுந்துள்ளத. திமுக ஆட்​சி​யில் முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கான போட்​டித் தேர்​வில் கட்​டாய தமிழ் பாடத்​தில் 85 ஆயிரம் பேர் தோல்​வியடைந்திருக் கிறார்​கள்.

இது தமிழை காப்பாற்​றுகிறேன் என வெற்று வசனம் பேசும் ஆட்​சி​யின் தோல்வி. நடை​முறை​யில் தமிழ் எந்த அளவுக்கு வளர்க்​கப்​பட்​டிருக்​கிறது என்​ப​தற்​கும் இந்த தேர்வு முடிவு​கள் சாட்​சி திமுக., தமிழ் வளர்த்த லட்சணம் இப்போது இன்னும் பகிரங்கமாகவே வெளித் தெரிந்து வருகிறது. அடிப்படைத் தமிழ் கூடத் தெரியாத ஒரு சமுதாயத்தை அறுபதாண்டு திராவிட இயக்கங்களின் ஆட்சிக் காலம் உருவாக்கியிருக்கிறது என்பது அப்பட்டமாகக் கூறித்தான் தெரியவந்துள்ளது. மு.க.ஸ்டாலின் உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக குடியரசு தலைவர் தேர்தலில் தமிழர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஆதரவு தரவில்லை,, ஒரு தமிழனை துணை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவு தரவில்லை தமிழருக்கு எதிரான  உங்களுக்கும் தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. என எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டி வருகிறது. 

சன் டிவி முதல் கிளவுட் 9 வரை திமுகவினர் அதாவது உங்கள் மருமகன் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வரை அனைத்தும் தமிழா , திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு எத்தனை தமிழ்வளர்த்த அறிஞர்கள் பெயர்கள் வைத்துள்ளீர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர்  தமிழ் வழி கல்வி பயின்றோர், இல்லை தமிழ் அறிஞர்கள் தமிழை வைத்து பிழைப்பு மட்டுமே நடத்தும் திமுக என நெட்டிசன்கள் கனிமொழியை விமர்சித்து வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் இன்னும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அந்த வழக்கையும் விரைவாக  விசாரணைக் கொண்டு வந்து தமிழைக் கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய  அரசு மேற்கொள்ளவில்லை.மொழி விஷயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டுவது அரசியல்; ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தான் தீர்வு என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி அரசியலைத் தெரிந்தே செய்தால் அதைக் கைவிட்டு ஆக்கப்பூர்வ அரசியலுக்கு மாற வேண்டும். என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது..