Cinema

பனிமலருக்கு என்ன "ஆச்சு" பத்திரிகை துறையை விட்டே வெளியேறிவிட்டாரா? என்னதான் ஆச்சு?


தீவிர பெரியாரிஸ்ட் மற்றும் திமுக ஆதரவாளரான பனிமலர் முன்பு போல் இப்போது அரசியல் கருத்தோ அல்லது அரசியல் ரீதியாக வீடியோக்களோ பதிவிடுவதை பார்க்க முடியவில்லை, மேலும் பத்திரிகை துறையில் செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் என பத்திரிகை துறையில் பணியாற்றி வந்த பனிமலர் இப்போது எந்த ஊடகத்திலும் வேலை செய்வதாக தெரியவில்லை என்கின்றனர்.


மேலும் இப்போது பனிமலர் தனியாக விளம்பரம் மற்றும் மேக்கப் போன்ற பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது, மக்களுக்கு சேவை செய்வதற்காக பத்திரிகை துறைக்கு வந்தேன் என்று கூறிய பனிமலர் இப்போது அந்த துறையில் இருந்து வெளியேற காரணம் என்ன என பல கேள்விகள் எழுந்தன, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உதயநிதி தனது முகநூல் பக்கத்தில் பிள்ளையார் சிலையை பகிர்ந்து இருந்தார்.

இதற்கு பனிமலர் எதிர்ப்பு தெரிவிக்க அது பெரும் சர்ச்சையில் முடிந்தது, மேலும் உதயநிதியை விமர்சனம் செய்து பதிவிட்ட ட்விட்டை நீக்கியும் இருந்தார் பனிமலர், அப்படி இருக்கையில், அதன் பின்னால் நடைபெற்ற சில காரணங்களால் பனிமலர் அந்த தனியார் ஊடக நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்பு எல்லாம் தீவிர பெரியாரிஸ்ட் என காட்டி கொண்ட பனிமலர் இப்போது தீபாவளி விளம்பரங்கள் தொடங்கி ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வரை எது கிடைத்தாலும் நடித்து வருகிறாராம் ஒரு வேலை பத்திரிகை துறையை காட்டிலும் இதில்தான் வருமானம் என ஒதுங்கி விட்டாரோ பனிமலர்.

எப்படியோ திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல கேள்விகளை எழுப்பிய நடிகர்கள் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இப்போது வாய் மூடி அமைதியாக தங்கள் பணியை பார்ப்பதாகவும் இவர்கள் அனைவரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் மீண்டும் தங்கள் பழைய அவதாரத்தை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.