24 special

அழைத்த அறிவாலயம்.... வண்டியை திருப்பிய பிரசாந்த் கிஷோர்....

mk stalin, prashant kishore
mk stalin, prashant kishore

பிரபல தேர்தல் யூக வகுப்பாளராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக யூகங்களை அமைத்து திமுகவை தமிழக தேர்தலில் வெற்றி அடையச் செய்தார். அதாவது 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுகவை குறித்து ஒரு பாடல் அதிகமாக வலம் வரும் அது மட்டுமின்றி திமுக செய்ய உள்ள பல நலத்திட்டங்கள் குறித்தும், நாங்கள் ஆட்சி அமைத்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என பல வாக்குறுதிகளை திமுக வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டது. இதனை அடுத்து எங்கெங்கு எப்படி மக்களை தன் பக்கம் திருப்ப வேண்டும் வாக்குச்சாவடி முகவர்களை கையாளுவது எப்படி அவர்களுக்கு எப்படி வழிமுறைகளை கூறுவது வழி நடத்துவது என்ற அனைத்தையும் மேற்பார்வையிட்டு திட்டமிட்டவர் பிரசாந்த் கிஷோர்.


இவருக்கு உறுதுணையாக அப்பொழுது திமுக தரப்பில் முதல்வர் மு க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியாக 2021 தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக பல அதிருப்திகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. ஏனென்றால் திமுக தனது வாக்குறுதிகளில் கொடுத்த ஒரு உறுதியையும் உறுதியாக நிறைவேற்றவில்லை! பெரும்பாலான வாக்குறுதிகள் அனைத்தும் இன்னும் எழுத்து வடிவமாகவே உள்ளது செயலில் ஒன்றும் செயல்படவில்லை செயலுக்கு வந்த வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் ஆசிரியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் தங்கள் தரப்பில் போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பிற்கு அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் திருப்திகரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் மேலோங்கி இருப்பதால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சரிவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அதிமுக பாஜக கூட்டணி விலகல் ஏற்பட்டது வேறு திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அதிமுக பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கட்சிக் குள்ளும் பல சச்சரவுகள் கட்சியின் நிர்வாகிகள் ஒருவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதில்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு திமுக கவுன்சிலர்களும் மேயரும் சண்டையிட்டு வருவதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இப்படி கட்சிக் குள்ளும் கட்சிக்கு வெளியேவும் திமுகவிற்கு சாதகமான சூழல் இல்லாததால் இந்த முறையும் பிரசாந்த் கிஷோரை அழைத்து தேர்தலுக்கான வியூகங்களை அமைக்க வைக்கலாம் என்ற தொடர்ந்து திமுக பிரசாந்த் கிஷோருக்கு அழைப்புகளை விடுத்துக் கொண்டே இருந்தது. 

ஆனால் தற்போது பிரசாந்த் கிஷோர் ஜன் சூரஜ் யாத்திரையில் தன்னை ஈடுபடுத்தி க் கொண்டிருந்தார். அதோடு அந்த யாத்திரையில் அரசியலில் ஏதேனும் சாதனை புரிந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைக்கிறவர்கள் எங்கள் அமைப்பு இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம் நாங்கள் வெற்றியடைவதற்கான வழிகளை காட்டுவோம் என்று கூறி தன் யாத்திரையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் திமுக பிரசாந்த் கிஷோரை டிசம்பரில் அழைத்து தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விடலாம் என்று அவரை திமுக அணுக முற்பட்ட பொழுது பிரசாந்த் கிஷோர் திமுகவின் சரிவை கணக்கிட்டு தற்பொழுது ஆந்திரா பக்கம் திரும்பியுள்ளார். அதாவது ஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க பிரசாந்த் கிஷோர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் அறிவாலய தரப்பு ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளது.