நம் ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு ஆணாகப் பிறக்கிறோம் இவர்கள் தான் எனது பெற்றோர்களா இந்த பகுதியில் தான் நான் வசிக்கப் போகிறேனா இப்படித்தான் நான் பிறக்கப் போகிறேனா என்ற எந்த ஒரு விஷயமும் நமக்கு முன்கூடியே அறிவிக்கப்பட்டு அதற்குப் பிறகு நாம் பிறப்பதில்லை அதேபோன்று இந்த மதத்தில் தான் பிறக்கப் போகிறேன் நான் இந்த மதத்தில் தான் பிறப்பேன் என்ற தகவலும் நமக்கு தெரியாது, அந்த தகவலை கூறி பிறப்பதற்கு முன்பே கட்டளை இட முடியாது! சிலர் கடவுள் இருக்கிறார்கள் என்பார்கள் சிலர் கடவுளே இல்லை என்பார்கள் எதுவாக இருந்தாலும் நம்மை தாண்டி ஒரு சக்தி இருப்பது என்பது அனைவரும் மனதில் இருக்கும் ஒரு நம்பிக்கை. அப்படி அந்த நம்பிக்கையின் திட்டமிடுதலாலே ஒருவர் ஒரு மதத்தில் ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கிறார்.
அப்படி பிறந்ததற்கு பிறகு ஒரு முடிவெடுக்கும் திறனை எட்டும் பொழுது நம் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்து முடிவெடுக்கலாம் 18 வயது ஆன உடனே உங்களுக்கு நாட்டை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை முடிவெடுப்பதற்கான அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது இந்திய அரசியலமைப்பு. அதே மாதிரி ஒருவர் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கும் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். நாம் பிறந்ததுக்கு பிறகு நமக்கு விருப்பமான சிலவற்றின் மீது பற்றி ஏற்பட்டு அதனை பெறுவதற்கான வழிகளிலும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறோம் ஆனால் பிறப்பதற்கு முன்பே இந்த மதம் இவர்கள் தான் பெற்றோர் என்று நிர்ணயிக்கப்பட்ட பிறந்ததற்கு பிறகு நமது பெற்றோர்களை எப்படி மாற்ற முடியாதோ அதேபோன்று மதத்தையும் மாற்ற முடியாது என்ற ஒரு கருத்து முன்பு இருந்தது. ஆனால் அதுவும் காலப்போக்கில் ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்றிக் கொள்ளலாம், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என சட்டமே கூறுகிறது.
அப்படி தற்பொழுது பெரும்பாலானோர் தங்களுக்குப் பிடித்த மதங்களுக்கு மாறிக் கொள்கின்றன. அந்த வகையில் இந்துக்கள் பலர் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறுவதாக கூறப்பட்டது, அதிலும் குறிப்பாக கிராமப் பகுதியில் சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு நலனுக்காகவே சில கிறிஸ்தவ பள்ளிகளில் சேர்த்து அங்கு மதமாற்றம் அடைகின்றனர் என்று சில தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும் என இந்துமத ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பட்டாச்சாரியார் கோவிலுக்குள் குழந்தைகளை அழைத்துச் சென்று பெருமாளின் அருமை பெருமைகளை கதையாக கூறியுள்ளார்.
அதாவது அந்த வீடியோவில், குழந்தைகளை பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்ற பட்டாச்சாரியர் நேரா வைகுண்டம் சென்றால் நமது ஆத்மா உடைந்து விடுமாம் அதனால் அங்கு ஒரு மாயமாட்சி அமர்ந்திருப்பாராம், அந்த மாயமாட்சியை பார்த்துவிட்டு பெருமாளை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக பெருமாளை பார்க்க முடியும் என்று கூறிவிட்டு யானே என்னை, அறியலிநேன்! யானே என் கனத்தின் என்றிருந்தேன்! யானே நீ என்னுடமையும் நீயே! என்ற நாயன்மார் பாடலை பாடி அந்த பாடலுக்கான அர்த்தத்தையும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிய தமிழில் விளக்கினார் ஒரு பட்டாச்சாரியார்.ஒரு பட்டாச்சியர் குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பெருமானின் புகழையும் பாடலையும் பாடி அந்த பாடலுக்கான விளக்கங்களை குழந்தைகளுக்கு புரியும் படி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இதே வீடியோவை வைத்து இது போன்ற நிகழ்வுகள் எல்லா ஊரிலும் நடந்தால் மதமாற்றம் என்பதே இருக்காது அதனால் கடவுளின் சிறப்புகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என விமர்சனங்கள் பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.