சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெற்றியை தொடர்ந்து, தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஞானவேல் இயக்குகிறார் இந்த படத்தில் மஞ்சுவாரியர், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முதலில் கேரளா மாநிலத்தில் நடந்தது. அதன்பின் தமிழ்நாட்டிற்கு விரைந்த படக்குழுவினர் கன்னியாகுமரியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்துள்ள ரஜினி செய்தியாளர்களை சந்தித்து தலைவர் 170 படம் குறித்த கேள்விக்கும் லியோ படம் குறித்தும் பேசியுள்ளார்.விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்; ரொம்ப வருடம் கழித்து இங்கேயே வந்திருக்கிறேன் அதாவது 1977 புவனா ஒரு கேள்விக்குறி படப்பிடிப்பிற்கு பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன். ஒரே ஒரு வருத்தம் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை என்பதே என் வருத்தம்” என தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் லியோ படம் குறித்து கேட்டபொழுது, தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லியோ மிக பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது.
படம் வெற்றிபெறுவதற்கு நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என கூறினார்.இப்போது நான் நடிக்கின்ற படம் அடுத்த வருடம் வெளியாகும். மேலும், பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று தெரிவித்தார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படம் பண்ணப்போறேன் என்று கூறினார்.முன்னதாக ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது காக்க மற்றும் கழுகு கதையை கூறியிருந்தார். அந்த கதயை கேட்ட விஜய் ரசிகர்கள் காக்க என்று கூறியது தளபதியயை தான் என புரிந்து கொண்டு இணையத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் போர் நடந்தது. அதெயெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினிகாந்த் லியோ படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்தது. விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்களோ இதற்கு அடுத்தது லோகேஷ் இயக்கத்தில் நடிக்கிறார் அதனால தான் ரஜினிகாந்த் இப்படி லியோ படத்திற்கு வாழ்த்து கூறினார் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.
ஏற்கனவே நடிகர் விஜய் லியோ பட ஷூட்டிங்கில் லோகேஷ் கனகராஜிடம் தலைவர் 171 கதை குறித்து 10 நிமிடம் கேட்டதற்கு நல்லா இருக்கு என கூறியதாக சமீபத்திய நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதைபோல் ரஜினிகாந்தும் லோகேஷ் கனகராஜை தொடர்பு கொண்டு லியோ படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றிபெறும் என தெரிவித்தும் இருந்ததாக லோகேஷ் கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து படம் லியோ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.