24 special

டாஸ்மாக் தீர்ப்பு வந்த மறுநாளே அமலாக்கதுறை இறக்கிய அஸ்திரம்...! ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்பார்த்த சம்பவம் ஆரம்பம்! சிக்கும் கோபாலபுரம்!

mkstalin
mkstalin

தமிழகத்தில் தற்போது அதிக வருமானம் ஈட்டி வரும் துறைகள் என்றால் ஒன்று டாஸ்மாக் மற்றொன்று கனிமவளங்கள் இந்தநிலையில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழலை வெளிகொண்டுவந்தது அமலாக்கத்துறை. கஅது வெறும் 20% சோதனையின் முடிவுதான் ஆனால் லட்சக்கணக்கான கோடி ஊழல் நடந்திருக்கும் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கலாம் என நினைத்திருந்த திமுகவுக்கு பேரிடியை இறக்கிறது அமலாக்க துறை. 


இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.டாஸ்மாக் மதுக் கடைகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினா் கடந்த மாா்ச் மாதம் அந்த நிறுவனம் தொடா்புடைய சுமாா் 25 இடங்களில் 3 நாள்கள் சோதனை செய்தனா்.குறிப்பாக, சென்னை எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகா் திலக் சாலையில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம், கரூரில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நண்பா்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனைக்குப் பிறகு அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வழக்குக்கு தடை கோரி உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.மூவருக்கு அழைப்பாணை: இந்த உத்தரவையடுத்து அமலாக்கத் துறை டாஸ்மாக் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன், பொது மேலாளா்கள் எஸ்.சங்கீதா, டி.துரைமுருகன் ஆகிய 3 உயா் அதிகாரிகளுக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த அழைப்பாணையை ஏற்று 3 அதிகாரிகளும், ஓரிரு நாள்களில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவாா்கள் எனக் கூறப்படுகிறது. இதன் அடுத்தக் கட்டமாக தனியாா் மதுபான நிறுவன உரிமையாளா்கள், நிா்வாகிகளிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.அதனை தொடர்ந்து மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப தயராகி விட்டது அமலாக்கத்துறை. இதில் பல பூதங்கள் வெளிவரும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. குறிபபாக கோபாலபுரம் வரை இந்த ரெய்டு பாதிக்கும் என உளவுத்துறை முதல்வருக்கு கூறியுள்ளது. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் எதற்கெடுத்தாலும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆட்சிஎன தற்பெருமை பேசாதீர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 

மேலும்  அமலாக்கத்துறை கடந்த 2017 முதல் 2024 ஆம் ஆண்டுவரை, பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த, அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது அல்ல; அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானதுதான்.அதுமட்டுமின்றி, டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள், ஊழியர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணையை மாநில அரசு தடுக்க முயற்சிக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்காது. தங்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம்.அமலாக்கத் துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் ஏன் வழக்கு தாக்கல் செய்தன? அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வியும் எழுகிறது  என நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி  தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.