24 special

அடுத்த முதல்வர் கனவு எல்லாம் களைந்து போனது....டெல்லி அதிரடி உத்தரவு!

edapadi
edapadi

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஐகோர்ட்டை நாடினார்கள்.


அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.இதுவரை எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டிற்குள் அனைத்தும் வந்துவிட்டது என்று எண்ணி தேசிய கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் என்று அறிவித்தனர்.இதுநாள் வரை சட்டப்போராட்டங்கள் அனைத்தும் வெற்றி கண்டு விட்டதாகவும், ஓபிஎஸ்-யின் வேலை இதற்குமேல் இருக்காது என்று மனக்கணக்கை போட்டு பாஜகவில் இருந்து வெளியேறினார். கூட்டணியில் இருந்து வெளியேறிய பத்து நாட்களில் அவருக்கு பலவிதமான பிரச்சனைகள் எழுந்தது. ஏற்கனவே பாஜக தலைமையை வைத்து தான்  இரட்டை இழை சின்னத்தை கைப்பற்றினார்.இதற்கிடையில் டெல்லி ஐகோர்ட்டில் அதிமுக பொது செயலாளராக இபிஎஸ்-ஐ தேர்வு செய்த அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் தொடர்ந்த வழக்கில்.இபிஎஸ் மற்றும்  இந்திய தேர்தல் ஆணையம் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது முன்னதாக அதிமுக விதியில் திருத்தம் செய்தது செல்லாது என்பது போல் எடப்பாடி தேர்வு செய்த விதி  செல்லும் என்றால், சசிகலா தேர்வு செய்ததும் சரி என்று மனுதாரரின் வாதமாக உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஐகோர்ட் தீர்ப்புக்கு முன் இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இழை சின்னம் உள்ளிட்ட அங்கிகாரத்தை கொடுக்குறோம்.ஆனால், நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு தான் இறுதியாக அதிமுக, இரட்டை இழை ஆகியவை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளோம். இப்போது எடப்பாடி பழனிசாமி எப்படி தேர்வு செய்யப்பட்டாரோ, அதுபோல தான் சசிகலாவை தேர்வு செய்தார்கள் இருப்பினும் சசிகலா தேர்வு செய்தது செல்லாது என்பது போல் எடப்பாடி பழனிசாமியின் தேர்வு செய்தது  எப்படி? ஒருவேளை இரட்டை இழை சின்னம் ஆபத்து ஏற்பட்டு மூழ்கினால், எடப்பாடி பழனிச்சாமி அரசியல் வாழ்கை அஸ்தாபனம் ஆகிவிடும். அடுத்ததாக இரட்டை இழை இல்லாதபோது அதிமுகவில் இருக்கும் தலைவர்கள் வேறு  கட்சிக்கு செல்வார்களா அல்லது எடபடியுடன் இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்தது நான் தான் அதிமுக முதலைமச்சர் என்று கனவில் இருந்த எடபடிக்கு இந்த செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.