Cinema

மோகன்லால் செய்த விஷயம்... அசிங்கப்பட்டு நிற்கும் சூர்யா, ஜோதிகா...!

mohanlal, surya, jothika
mohanlal, surya, jothika

வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி கேரள மாநிலம் உருவான நாளாக கருதப்படுகிறது அதனை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் கேரளா மாநிலத்தின் பிறந்த நாளை  விமர்சையாக கொண்டாட அம் மாநில அரசு முடிவு செய்து பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இப்படி கோலாகலமாக நடைபெற உள்ள நிகழ்ச்சியை வாழ்த்தி கேரள மாநிலத்தின் பிரபல நடிகராக உள்ள மோகன்லால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'கேரளா மாநிலத்தில் ஒரு மலையாளி ஆக பிறந்ததில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உலகின் எந்த பகுதிகளுக்கு சென்றாலும் மலையாளிகள் காணப்படுகிறார்கள் என்றும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மலையாளிகள் முக்கியத்துவம் பெற்றுவதாகவும்' தெரிவித்திருந்தார். 


நடிகர் மோகன்லால் வெளியிட்ட இந்த வீடியோ பதிவை அந்த மாநிலத்தின் மாநிலத்தின் முதல்வர் பிரனாய் விஜயன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்பொழுது இந்த வீடியோ மற்ற அனைவராலும் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆட்சி நடந்த பொழுது தமிழகத்தில் சமூக போராளிகளாகவும் சமூக பிரச்சனைகளிலிருந்து தமிழகத்தை காக்க பிறந்தவர்கள் போன்று வலம் வந்த சூர்யா, ஜோதிகா, சத்யராஜ் போன்றோர் தற்பொழுது தமிழகத்தில் அடுக்கடுக்கான பிரச்சனைகள் மாறி மாறி வந்து கொண்டிருக்க நிலையிலும் அமைதியாக இருந்து வருகின்றனர். அதுவும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி போராட்டங்களில் முன்வைத்த பொழுதும் அவர்கள் தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை ஆனால் கர்நாடக மாநிலத்தில் தங்களிடம் தண்ணீர் இல்லை இந்த நிலையில் தமிழகம் தண்ணீர் கேட்பது நியாயமற்றது அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தில் அம்மாநிலத்தின் முக்கிய மற்றும் அனைத்து திரை உலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

தண்ணீர் தர கூடாது என்று கர்நாடக மாநிலத்தின் பிரபலங்கள் போராட்டத்தை மேற்கொள்கின்றார்கள் ஆனால் தண்ணீர் எங்களுக்கு வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு கூட தமிழக திரை உலகத்தின் சார்பாக எந்த ஒரு ஆதரவும் உதவியும் வழங்கப்படவில்லை இதே நிகழ்வு அல்லது இதே சம்பவம் கடந்த ஆட்சியில் நடந்திருந்தால் இப்படித்தான் இவர்கள் அமைதி காத்திருப்பார்களா? சமூக போராளிகள் என்றால் அனைத்து காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் ஒரு ஆட்சியில் ஒரு மாதிரி மற்ற ஆட்சியில் இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருப்பதா என்ற கண்டனங்களும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டு பேசப்படுகிறது. 

அதுமட்டுமின்றி இவை மக்கள் மத்தியில் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இனி படங்கள் நடித்து வெளியில் வரட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என சினிமா விமர்சகர்கள் சூர்யா, ஜோதிகா போன்ற கடந்த ஆட்சி சமூக போராளிகளை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் மலையாள மக்கள் மலையாளிகளாக இருக்கின்றனர், கன்னட மக்கள் கன்னடர்களாக இருக்கின்றனர், ஆனால் தமிழக மக்களை தான் திராவிடர்கள் என சிலர் மடை மாற்றுகிறார்கள் என்ற விமர்சனமும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை காவிரி விவகாரத்தில் சூர்யா, ஜோதிகா ஒரு வார்த்தை ஏன் தங்களது வலைத்தளத்தில் ஒரு பதிவு கூட செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.