முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. அதன்பின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து விளக்கம் கேட்டறிந்து. இந்நிலையில் தற்போது திமுக எம் ஜெகத்ரட்சகன் அவரது வீட்டில் வருமான வரித்துரையினர்.
கடந்த ஒரு வாரமாக சல்லடை போட்டு அலசினர். அதன் பின் அமலாக்கத்துறை உள்ளே வந்து, தற்போது அவரது சொந்தமான இடங்களில் கைப்பற்ற ஆவணங்கள் பணத்தை கொண்டு எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கிடையில் இன்று திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் "திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது'’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004 முதல் 2007 வரையிலான கால கட்டடத்தில் பிரதமர் மன்மோகன் சிங்க் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆ.ராசா ஹரியானாவில் உள்ள குறுகிராமில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு, சுற்று சூழல் ஒப்புதல் அளிப்பதில் கைமாறு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை சுற்று சூழல் ஒப்புதல் அளிப்பதில் பணம் கைமாறு பெற்றது உறுதியானது. அதனை ஆ.ராசாவின் உறவினர் பெயரில் தொடங்கப்பட்ட கோவை ஷெல்டர் புரமோட்டார்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் பணம் பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த புகாரின் அடிப்படையில் கோவையில் பினாமி பெயரில் முதலீடு செய்ததன் காரணமாவே, தற்போது 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.