24 special

மீண்டும் சோதனையை தொடங்கிய அமலாக்கத்துறை...பின்னணி என்ன?

Rathinam, ED Raid
Rathinam, ED Raid

மணல் குவாரிகளில் அரசு விதித்த அளவை விட மணல் அள்ளப்பட்டதாக புகாரின் பேரில்; கடந்த இரண்டு மாதம் முன் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது. அதன், அடிப்படையில் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் விழுப்புரம், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருகி உள்ளிட்ட 8 மாவட்டத்தில் சோதனையில் அமலாக்கத்துறை இரண்டு குழுக்களாக செயல்பட்டு ஒரே நேரத்தில் சோதனை செய்த்தனர். இதில் முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்பட்டது. அந்த சோதனைக்கு பிறகு நீர்வளத்துறை அதிகாரிங்களை ஆஜராக சம்மன் அனுப்பியது.


மேலும் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் உறுதுணையுடன் மணல் வரம்புகளை மீறி அள்ளப்பட்டுள்ளதாக பத்திற்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக தான் பொது பணித்துறை அமைச்சர் எவ. வேலு வீட்டிலும் சோதனை நடத்தியதாக தகவல் வந்தன. இந்த சாமானில் முதல் ஆளாக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆஜராகி இரண்டு நாட்களாக விசாரித்தனர். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள குடியாத்தம் குமரன் வீடியோவில் அமைச்சர் துரைமுருகன் ரூ.60000 கோடி மணல் ஊழலில் ஈடுபட்டதாக சமூக தளத்தில் வீடியோ ஒன்றிய வெளியிட்டார். அதில் ஊழல் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக இப்போது மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் ஜிடிஎன் சாலையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரத்தினம். இவர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

கடந்த செப். 12, 13-ம் தேதிகளில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.இந்நிலையில், நேற்று 2-வதுமுறையாக தொழிலதிபர் ரத்தினத்தின் பங்களாவில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. சோதனையின்போது ரத்தினம் மற்றும் அவரது 2 மகன்களும் இல்லாத நிலையில், ரத்தினத்தின் மனைவி செல்வி மட்டும் பங்களாவில் இருந்தார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை குறித்த விளக்கங்களை கூறியதுடன், சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதமே உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் சோதனையில் ஈடுபடுவது ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் எழுகிறது. இந்த சோதனையை பார்க்கையில் திமுகவில் உள்ள பெரிய தலைக்கு அமலாக்கத்துறை ஸ்கெட்ச் போடுபட்டுள்ளதாக வேறு பேசப்படுகிறது. மேலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரத்தினத்தின் கொடி பறப்பதாக கூறப்படுகிறது.