24 special

முதல்வருக்கு பறந்த மெசேஜ்.... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த அந்த சம்பவம்....

mk stalin, pm modi
mk stalin, pm modi

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது, நாடு முழுவதும் இரண்டாம் முறையாக பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய நிலையில் தமிழகத்தில் மட்டும் பாஜக கூட்டணி தேனி தொகுதியை மட்டும் தான் கைப்பற்றியது. இதர 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது, அப்போது மோடி எதிர்ப்பு அலை காரணமாக இருந்தது திமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற காரணம் என கூறப்பட்டது.


ஆனால் ஐந்து ஆண்டுகளில் தற்பொழுது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என கருத்துக்கணிப்பு நிலவரங்களும், கள நிலவரங்களும் கூறுகின்றன. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜக கூட்டணி தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தரவில்லை என்றாலும் பிரதமர் கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும், வந்தே பாரத் ரயில் போன்ற பல திட்டங்களால் தமிழகத்தில் பயனாளர்கள் அதிகரித்துள்ளனர் எனவும் அதன் காரணமாக மோடி எதிர்ப்பு என்கின்ற ஒரு அரசியல் அலை தமிழகத்தில் இருந்து முற்றிலும் ஒழிந்து விட்டதாகவும் வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

தற்பொழுது அண்ணாமலை வேறு ஒரு பக்கம் இறங்கி யாத்திரை நடத்தி பாஜக ஆதரவை அதிகரிக்க வைக்க செய்து வருகிறார், இப்படி தொடர்ச்சியாக திமுக கூட்டணிக்கு இந்த முறை வெற்றி வாய்ப்பு என்பது பெரிய அளவில் இருக்காது என தெரிந்து தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் ஒரு காரியம் செய்துள்ளார். அவசர அவசரமாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கூட்டப்பட்டது, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தான் எப்பொழுதும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் அதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை கலைஞர் அரங்கத்தில் கூட்டாமல் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இது திமுகவில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி அனைவரும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தயாராக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்திருக்கும் திமுக தரப்பிலும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது, திமுக தரப்பில் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும் தேர்தல் வேலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட இந்த கூட்டம் எனக் கூறப்பட்டது. 

இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் 'நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள்தான் வேட்பாளராக இருப்பார் இந்த தொகுதிக்கு இவருதான் வேட்பாளர்' என உறுதி எதுவும் இல்லை. நாம் கை காட்டுபவரே பிரதமராக இருக்க வேண்டும், 40 தொகுதிகளிலும் நாம் வென்றால் மட்டுமே அது சாத்தியம்' என பேசினார்.மேலும் சில விவரங்களை திமுக தரப்பில் விசாரித்த போது பல உண்மைகள் வெளிவந்தன, அதாவது தற்பொழுது கள நிலவரம் சரியில்லை பிரதமர் மோடி எதிர்ப்பு அலையும் தமிழகத்தில் இல்லை!

இந்த முறை தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெறுவதற்கு பெரும்பான்மையான தொகுதிகளை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் எக்காரணத்தைக் கொண்டு மாவட்ட செயலாளர்கள் சோர்ந்து போய்விட கூடாது என்பதற்காகத்தான் இந்த முறை பிரதமர் மோடி எதிர்ப்பையோ அல்லது வேறு எதுவும் முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. அது மட்டும் அல்லாமல் கடந்த முறை திமுக எம்பிக்கள் வெற்றி பெற்று அவர்களின் மீது மக்கள் கோபமாக இருப்பதால் அவர்களுக்கு சீட்டு வழங்குவதில் திமுக உறுதியாக இல்லை, அதனால் புது ஆட்களை இறக்கவும் தயங்குவதற்கு இல்லை இதன் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து மாதமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.