24 special

திமுக தீட்டிய திட்டத்திற்கு அமலாக்க துறை வைத்த ஆப்பு..! புலம்பி தவிக்கும் அமைச்சர்..!

Mk stalin, enforcement department
Mk stalin, enforcement department

அமலாக்கத்துறை கழுகுபோல் கண்கணித்தும் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்திக்க செல்லும் ரகசியம் பற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது.தங்களுக்கு கிடைத்த ஆவணங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்தனர், கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் அவரை விசாரிக்க சென்ற பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பிறகு அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டதை முடிவு செய்த மருத்துவர்கள் அவரது ரத்த குழாயில் மூன்று அடைப்புகள் உள்ளதாகவும் அதனால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரைத்து அதனை அறிக்கையாக வெளியிட்டது. மருத்துவக் குழு விசாரித்து அறிக்கை வெளியிட்டிருந்தாலும் அமலாக்க துறையினர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் இருந்து இதய சிகிச்சை நிபுணர்கள் நான்கு பேரை வரவழைத்து அவர்களிடம் அவரது உடல்நிலை பரிசோதிக்க கூறினர்,  பிறகு இ எஸ் ஐ மருத்துவர்களும் இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். 

இதற்கிடையில் அமலாக்க துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று மனு அளித்து அதன் அடிப்படையில் மருத்துவமனையில் மேற்கொண்ட விசாரணையின் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். தற்போது காவேரி மருத்துமனையில் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியை பார்க்க தொடர்ச்சியாக திமுகவினர் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அனுப்பியதாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் கடந்த 2 நாட்களாக செல்வது அமலாக்க துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று யாராயிருந்தாலும் பார்க்க கூடாது என்றும் பாதுகாப்பு படையினர் செந்தில் பாலாஜியை காண்பதற்கு வருவபவர்களை விரட்டி வருகின்றனர். 

இதன் பின்னணியில் அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜிக்கு தற்போது மிரட்டல்கள் விடப்படலாம் அல்லது செந்தில் பாலாஜி ஏதேனும் தகவல்களை வெளியில் கொடுத்து விடாமல் இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி கண்காணித்தும் பாதுகாத்தும் வருகிறோம் ஒரு நிமிஷம் கூட கண் அசரக்கூடாது என பாதுகாப்பு படையினருக்கு  அறிவுறுத்தப்பட்டதால் இந்த பாதுகாப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையை சுற்றி பாதுகாப்பு படையினர்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நேற்று செந்தில் பாலாஜி சந்திக்க அமைச்சர் சேகர்பாபு, கொறடா கோவி செழியன் போன்றோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு நீதிமன்ற காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை மருத்துவர்களிடம் அவர்கள் உடல்நிலை பற்றி விசாரித்தோம் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கூறினார்கள் என தெரிவித்தார். 

எப்படியாவது செந்தில் பாலாஜியை சந்திக்க வேண்டும் என்றும் பார்த்துவிட வேண்டும் என்றும் திமுக துடிப்பதும் அதனை அமலாக்கத்துறை தடுத்து திமுகவின் திட்டங்களை முறியடித்தும்  வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து விசாரணையில் முக்கியமான தகவல்கள் எதுவும் அவரிடம் கூறி விட வேண்டாம் என  திமுகவினர் முயன்று வருவதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வருகிறார் என்றதும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்க்க முயற்சி செய்ததும் பின்னர் அவரையும் அமலாக்கத்துறை உள்ளே அனுமதிக்காததும் குறிப்பிடத்தக்கது.செந்தில்பாலாஜி வாய்திறந்தால் அது திமுகவிற்கு வாழ்நாள் ஆபத்து என உணர்ந்து செந்தில்பாலாஜியை பார்க்க ஒட்டுமொத்த அமைச்சரவையும் சுற்றி வருவது அமலாக்கத்துறையை ரொம்பவே அலர்ட் ஆக்கியுள்ளது.