24 special

அண்ணாமலையை கைது செய்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்த இளம் அமைச்சர்...!ஆஃப் செய்து உட்கார வைத்த முதல்வர்

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது,2ஜி வழக்கில் சிக்கிய திமுக தற்போது மீண்டும் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.


இவை அனைத்திற்கும் மத்திய பாஜகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தான் காரணம் என முதல்வரிடம் பல மூத்த அமைச்சர்கள் கடு கடுத்த நிலையில், என்ன செய்யலாம் என யோசனை கேட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அப்போது இளம் அமைச்சர்  ஒருவர், அரசியல் ரீதியாக பொறுத்து கொண்டு இருந்தால் நாமும் அதிமுக போன்று அடிமை கட்சி என சொல்லி விடுவார்கள்.

நாமும் பதிலடியாக அண்ணாமலையை கைது செய்யவேண்டும் என பேசி இருக்கிறார், இளம் அமைச்சரின் விமர்சனத்தை பார்த்த பலரும் இதெல்லாம் தேவையில்லாத வேலை அண்ணாமலை Z பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். ஏற்கனவே வாட்ச் பில் என்ற ஒன்றை கேட்ட செந்தில் பாலாஜி தற்போது என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணாமலையை கைது செய்தால் அது பாஜகவிற்கு தான் வலு சேர்க்கும் ஏற்கனவே செந்தில் பாலாஜி கைது செய்ததை மக்கள் வரவேற்க செய்து இருக்கிறார்கள், ஒவ்வொரு ஊரிலும் குடி மகன்கள் கொண்டாட்டம் போகிறார்கள் இது தான் தற்போதைய நிலை என அடித்து கூறி இருக்கிறார்.

இதையடுத்து தான் தொகுதி வாரியாக மக்களின் மன நிலை என்ன? செந்தில் பாலாஜி கைது குறித்து என்ன நினைக்கிறார்கள், பாஜகவை மக்கள் ஆதரிக்க செய்கிறார்களா? நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மன நிலை என்ன என அறிய தொகுதி வாரியாக மக்கள் பல்ஸ் அறிய உத்தரவு சென்று இருக்கிறதாம்.

செந்தில் பாலாஜி கைது செய்யட்டது மக்கள் மத்தியில் அனுதாபத்தை உண்டாக்கும் என ஒரு தரப்பும் இல்லை 2ஜி வழக்கு போன்று பின்னடவை கொடுக்கும் என அமைச்சரவையில் ஒரு தரப்பும் கருதுவதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் உளவு துறையிடம் அறிக்கை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாமலையை கைது செய்தே ஆகவேண்டும் அதற்கான நேரம் இதுவல்ல பொறுத்து இருங்கள் என அண்ணாமலையை கைது செய்தே தீரவேண்டும் என பிடிவாதம் பிடித்த இளம் அமைச்சரை ஆப் செய்து இருக்கிறார்களாம். மேலும் இதே மன நிலையில் இருக்கும் திமுக தொண்டர்களை சமாதானம் படுத்தும் விதமாகதான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவாகரத்தை மையமாக கொண்டு மத்திய அரசிற்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை முதல்வர் வெளியிட்டு இருந்தாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.